சிறப்பாக பணியாற்றிய போலீஸ் அதிகாரிகள் 9 பேருக்கு அரசு விருது

சென்னை: தமிழக அரசு நேற்று வெளியிட்ட அறிக்கை:
ஆண்டுதோறும் சுதந்திர தினத்தை முன்னிட்டு, காவல் துறையில் சிறப்பாக பணிபுரியும் அதிகாரிகளுக்கு, தமிழக முதல்வரின் சிறப்பு பணி பதக்கங்கள் வழங்கி ஊக்கமளிக்கப்படுகிறது. புலன் விசாரணை பணியில் சிறப்பாக பணியாற்றியவர்களின் கடின உழைப்பை அங்கீகரிக்கும் வகையில், 7 போலீஸ் அதிகாரிகளுக்கு தமிழக முதல்வரின் காவல் புலன் விசாரணைக்கான சிறப்பு பணி பதக்கங்கள் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
அதன்படி, சென்னை புறநகர் கொரட்டூர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் அகஸ்டின் பால் சுதாகர், சென்னை குற்றப் புலனாய்வுத் துறை குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன், கணினி வழி குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் வேல்முருகன், ராமநாதபுரம் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன், மதுரை ஒருங்கிணைந்த குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் சரவணன், கோவை மாநகர் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் சந்திரசேகர், செங்கல்பட்டு மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு இன்ஸ்பெக்டர் சவுந்திரராசன் ஆகியோருக்கு விருதுகள் வழங்கப்படுகிறது.
இதேபோல் பொதுச் சேவையில் எடுத்துக்காட்டாக திகழும் 2 காவல் துறை அதிகாரிகளுக்கு சிறந்த பொதுச் சேவைக்கான தமிழக முதல்வரின் காவல் பதக்கம் வழங்க ஆணையிடப்பட்டுள்ளது. இதை, கோவை துணை ஆணையாளர் (சட்டம்& ஒழுங்கு) ஹேமா கருணாகரன், கோவை தொலைத்தொடர்பு தொழில்நுட்பப் பிரிவு இன்ஸ்பெக்டர் திலகவதி ஆகியோர் பெறுகின்றனர்.
இவர்களுக்கு, Lasix online தலா 8 கிராம் எடையுடன் கூடிய தங்கப்பதக்கம், ஸி 5 ஆயிரம் ரொக்கப் பரிசுடன் முதல்வர் விருது வழங்குகிறார்.

Add Comment