சுதந்திர கொடியேற்றி பிரதமர் மக்களுக்கு உரை

புதுடில்லி: நாட்டின் 65 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு டில்லி செங்கோட்டையில் தேசிய கொடியேற்றி வைத்து நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்தவும், அமைதியை குலைக்கவும் சிலர் முயற்சி செய்கின்றனர் என்று பிரதமர் மன்மோகன் சிங் குற்றம்சாட்டினார். மேலும் தமது 7 ஆண்டு கால ஆட்சியில் வளர்ச்சிப்பணிகள் ஏராளம் நடந்திருக்கிறது; இன்னும் அதிகம் செய்ய வேண்டியிருக்கிறது என்றார்.

அவரது உரையில் மேலும் தெரிவித்ததாவது: நாட்டில் வறுமையை ஒழிக்க அரும்பாடுபட்டு வருகிறோம். ஊழல், நாட்டின் வளர்சிப்பாதைக்கு தடையாக உள்ளது. ஊழலுக்கு எதிரானவர்கள் மீது இந்த அரசு சட்டப்பூர்வ நடவடிக்கையை துரிதமாக எடுத்து வருகிறது. பலமான லோக்பால் மசோதாவை உருவாக்க அரசு முனைந்து Buy Lasix செயல்பட்டு வருகிறது. ஊழலை ஒழிக்க இந்த மசோதா பயன் தரும். உண்ணாவிரதமோ , போராட்டமோ வலுவான லோக்பால் மசோதாவை உருவாக்க முடியாது. பார்லி.,யில் தான் இறுதி முடிவு எடுக்க வேண்டும்; விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த முக்கியத்துவம் அளித்து வருகிறோம்.நிலம் கையகப்படுத்துதல் விவசாயிகளை பாதிக்காதவாறு பார்த்துக்கொள்ளப்படும். இதற்கென விரைவில் புதிய சட்டம் நடப்பு பார்லி., கூட்டத்தொடரில் இயற்றப்படும்; வறுமையை ஒழிக்க அனைவரும் ஒரு சேர போராட வேண்டும்.

 

கல்வி வளர்ச்சிக்கு கூடுதல் நிதி ஒதுக்கப்படும். கல்வி மேம்பாட்டுக்கு ஒரு தனி அமைப்பு உருவாக்கப்படவிருக்கிறது. இவ்வாறு பிரதமர் பேசினார்.

 

முன்னதாக கொடியேற்ற வந்த பிரதமரை பாதுகாப்பு துறை அமைச்சர் ஏ.கே., அந்தோணி மற்றும் பல்லம்ராஜ் வரவேற்றனர். ராணுவ முப்படை வீரர்களின் அணிவகுப்பை ஏற்றார்.

Add Comment