அதிமுக., ஆட்சியில் உள்ளாட்சிகளுக்கு முக்கியத்துவம் : அமைச்சர் செந்தூர்பாண்டியன் பெருமிதம்

கடையநல்லூர் : அதிமுக ஆட்சி பொறுப்பிற்கு வரும் போதெல்லாம் தமிழகத்தில் கிராம பஞ்.,கள் தன்னிறைவு பெறும் என அமைச்சர் செந்தூர்பாண்டியன் பேசினார்.கடையநல்லூர் யூனியன் பொய்கை பஞ்.,சில் அமைந்துள்ள அரசு உயர்நிலைப்பள்ளி, சீரணி மேடை, புதிய கட்டடம் மற்றும் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு புதிய கட்டடங்களுக்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று நடந்தது. விழாவிற்கு தமிழக கதர் மற்றும் கிராம தொழில்துறை அமைச்சர் செந்தூர்பாண்டியன் தலைமை வகித்தார்.கடையநல்லூர் யூனியன் சேர்மன் தீபக், ஓய்வு பெற்ற பொதுப்பணித்துறை கண்காணிப்பு பொறியாளர் ஊர்மேலழகியான் சுப்பிரமணியன், பொய்கை அரசு உயர்நிலைப்பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் சுப்பிரமணியன் முன்னிலை வகித்தனர்.

 

கடையநல்லூர் யூனியன் துணைத் தலைவரும், தொகுதி அதிமுக செயலாளருமான பொய்கை மாரியப்பன் வரவேற்றார்.நிகழ்ச்சியில் மாவட்ட துணை செயலாளர் வி.பி.மூர்த்தி, ஒன்றிய செயலாளர்கள் வசந்தம் முத்துப்பாண்டி, செல்லப்பன், நகர செயலாளர் கிட்டுராஜா, ஊர்மேலழகியான் இளங்கோவன், சத்துணவு அமைப்பாளர் முருகன், ஓய்வு பெற்ற பேராசிரியர்கள் சங்கரசுப்பிரமணியன், கதிர்வேல்முருகன், இன்ஜினியர் buy Levitra online சொக்குவேல் முருகன், யூனியன் பிடிஓ.,க்கள் தங்கவேலு, லீலா, கடையநல்லூர் ஒன்றிய பேரவை செயலாளர் பெரியதுரை உட்பட பலர் பேசினர்.விழாவில் பொய்கை பஞ்.,அரசு உயர்நிலைப் பள்ளியில் சீரணி மேடை புதிய கட்டடம் மற்றும் பல்வேறு புதிய கட்டடங்களுக்கு அடிக்கல் நாட்டி அமைச்சர் செந்தூர்பாண்டியன் பேசியதாவது:
மக்கள் சேவைகளையும், தேவைகளையும் உடனடியாக நிறைவேற்றும் அமைப்பாக உள்ளாட்சி அமைப்பு செயல்பட்டு வருகிறது.

 

இதன் காரணமாகத்தான் தமிழக முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அரசு தாக்கல் செய்துள்ள பட்ஜெட்டில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு அதிக முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது.குறிப்பாக கிராமப்புற மக்களின் நலனை கருதி குடிநீர், சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளுக்கு பட்ஜெட்டில் சிறப்பம்சம் காணப்படுகிறது. கடையநல்லூர் தொகுதியை பொறுத்தவரை அனைத்து கிராம பஞ்.,களும் சிறப்பு பெற்றதாக அமையும் வகையில் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும். தமிழகத்தில் அதிமுக., ஆட்சி அமையும் போதெல்லாம் கிராம பஞ்.,கள் தன்னிறைவு பெறும் வகையில் நலத்திட்டங்கள் செயல்படுத்தப்படும்.இவ்வாறு அமைச்சர் செந்தூர் பாண்டியன் தெரிவித்தார்.விழாவில் பொய்கை நல்லமுத்து, இன்ஜினியர் அருணாசலம், முன்னாள் எம்.எல்.ஏ., நயினாமுகம்மது, கம்பனேரி பஞ்., தலைவர் மூக்கையா, இடைகால் பஞ்.,தலைவர் செல்லப்பா, தென்காசி ஒன்றிய செயலாளர் சங்கரபாண்டியன், அமைச்சர் உதவியாளர் செங்கோட்டை குருசாமி, குட்டியப்பா, ஆய்க்குடி பேரூர் செயலாளர் முத்துக்குட்டி, சாம்பவர்வடகரை அதிமுக செயலாளர் காந்திப்பாண்டியன், கடையநல்லூர் ஒன்றிய இளைஞரணி செயலாளர் லட்சுமணன், மாவட்ட இளைஞர் பாசறை துணை செயலாளர் செங்கோட்டை ராஜேஸ்வரன், ஒன்றிய பாசறை செயலாளர் சண்முகவேல் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Add Comment