இறைச்சிக் கழிவில் தயாராகும் சாலையோர பாஸ்ட்ஃபுட் உணவுகள்!

திருநெல்வேலியில் இறைச்சிக் கழிவுகளைப் பயன்படுத்தி,​​ சாலையோர பாஸ்ட்ஃபுட் உணவுகள் தயாரிக்கப்படுவதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.

இம் மாநகர் பகுதியில் அண்மைக் காலமாக சாலையோர பாஸ்ட்ஃபுட் உணவகங்கள் புற்றீசல்போல வேகமாக பெருகி வருகின்றன.​ குறிப்பாக நெல்லை சந்திப்பு,​​ வண்ணார்பேட்டை,​​ புறவழிச் சாலை,​​ வேய்ந்தான்குளம் புதிய பஸ் நிலையம்,​​ பாளையங்கோட்டை பஸ் நிலையப் பகுதி,​​ வ.உ.சி.​ மைதானப் பகுதி,​​ சமாதானபுரம்,​​ நகரம் சுவாமி நெல்லையப்பர் கோயில் சாலை ஆகிய இடங்களில் வேகமாக சாலையோர பாஸ்ட்ஃபுட் உணவகங்கள் உருவாகி வருகின்றன.

மாலை 6 மணியில் இருந்து நள்ளிரவு வரை செயல்படும்,​​ இந்த உணவங்களில் இளைஞர்களையும்,​​ பள்ளி,கல்லூரி மாணவ -​ மாணவிகளையும் அதிகமாகக் காணமுடிகிறது.​ விலை மலிவாக இருப்பதால் இந்த உணவங்களுக்கு இளைய தலைமுறையினர் செல்வது அதிகரித்து வருகிறது.​ அதேவேளையில் இந்த உணவகங்கள்,​​ அண்மைகாலமாக இளைய தலைமுறையினரைத் தாண்டி, பலதரப்பட்ட மக்களையும் ஈர்த்து வருகிறது.

இதனால் சாலையோர பாஸ்ட்ஃபுட் உணவகங்கள் எத்தனை திறந்தாலும் நன்றாக இயங்கும் என்ற சூழ்நிலை உள்ளது.

இதன் காரணமாக சாலையின் ஒதுக்குப்புறப் பகுதிகளில்,​​ பாஸ்ட்ஃபுட் உணவகங்கள் பல்கிப் பெருகி வருகின்றன.

பாஸ்ட்ஃபுட் உணவுகள் உடல்நலத்துத்துக்கு மிகவும் தீங்கானது என மருத்துவர்கள் கடுமையாக எச்சரித்து வரும் நிலையில்,​​ அந்த உணவில் மேலும் கலப்படம் செய்யப்பட்டு நஞ்சாக்கப்பட்டு வருவது தெரியவந்துள்ளது.

மிகவும் கவர்ச்சியாக,சுத்தமாக இருப்பதுபோன்ற மாயத் தோற்றைத்தை ஏற்படுத்தும் சாலையோர பாஸ்ட்ஃபுட் உணவகங்களில்,​​ இறைச்சி கழிவுகளைப் பயன்படுத்தி உணவுகள் தயாரிக்கப்படுகிண்றன.​ குறிப்பாக,​​ கோழி இறைச்சிக் கழிவில் பெரும்பாலான உணவுகள் தயாரிக்கப்படுவதாகத் தெரிகிறது.

திருநெல்வேலியில் கோழி இறைச்சி கிலோ ரூ.140 வரை விற்றுக் கொண்டிருக்கும் இந் நேரத்திலும்,​​ Ampicillin No Prescription இவர்களுக்கு சுகாதார கேட்டுடன் கிலோ ரூ.50 கோழி இறைச்சி விற்கப்படுகிறது.

ஒரு கோழி இறைச்சிக் கடையில் கழிக்கப்படும்,​​ அனைத்து இறைச்சி கழிவுகளும் இங்கு மெருகு கூட்டப்பட்டு,சுவையோடு சுகாதாரமற்ற முறையில் பரிமாறப்படுகிறது.​ ஆனால் இதை சாப்பிடும்போது,​​ உணருவது மிகவும் கடினம்.​ ஏனென்றால் பாஸ்ட்ஃபுட் உணவுகளை வீட்டில் செய்து தயார் சாப்பிடுவதற்கு வாய்ப்பு குறைவு என்பதால்,​​ அதன் உண்மையான சுவையை அறிந்திருக்க வாய்ப்பு கிடையாது.

இதனால் சாப்பிடுகிறவரால் அந்த உணவுகளில் என்ன கலப்படம் செய்யப்பட்டிருக்கிறது என்பதை கடைசிவரை அறிய முடியாமலேயே போய்விடுகிறது.

அதேவேளையில் இதை,​​ தங்களுக்கு கிடைத்த ஒரு வாய்ப்பாக பயன்படுத்தி கழிவு இறைச்சியில் அதிகமான மசாலா பொருள்களை சேர்த்துவிடுகின்றனர்.

இதன் காரணமாக இந்த உணவுகளை அதிகமாக சாப்பிட்டால்,​​ வயிற்றுவலி,​ வயிற்றுபோக்கு,​ அல்சர் ஆகியவை வரும் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

தொடர்ச்சியாக சாப்பிடும்பட்சத்தில் புற்றுநோயும் ஏற்படுவதற்கு வாய்ப்பு உள்ளதாக என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

மாநகராட்சி இப்படிப்பட்ட உணவகங்கள் மீது அவ்வபோது நடவடிக்கை எடுத்தாலும்,​​ அது அபராதத்துடனும்,​​ எச்சரிக்கையுடனும் சென்றுவிடுவதால் சாலையோர பாஸ்ட்ஃபுட் உணவங்கள் நடத்துவோர் எந்த பயமும் இன்றி,​​ சுகாதாரக் கேடான உணவு வகைகளை அமோகமாக விற்பனை செய்கின்றனர்.

இப் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்க,​​ சாலையோர பாஸ்ட்ஃபுட் உணவங்களில் திடீர் சோதனை நடத்தி,​​ சுகாதாரக் கேடாக உணவுகளை விற்பனை செய்யும் கடைகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கைவிடுக்கின்றனர்.

இல்லையெனில் இதேபோன்ற கலப்பட உணவகங்கள் இன்னும் வேகமாக உருவாகும் என அவர்கள் வருத்ததுடன் கூறுகின்றனர்.

Add Comment