Ramadan competition – 1,500 ரியால் பரிசை வெல்லுங்கள்

அஸ்ஸலாமு அலைக்கும்,,,
சவுதி அரேபியா ரியாத் நகரில் உள்ள தமிழ் தஃவா ஒன்றியம் அந்த நகரில் உள்ள ரவ்ழா இஸ்லாமிய அழைப்பு மையத்தின் அனுசரணையுடன் மாபெரும் “முஸாபகதுர் ரமழான்” எனும் ரமழான் மாத விஷேட போட்டி ஒன்றை ஏற்பாடு செய்துள்ளது.
உலகளாவியரீதியில் நடாத்தப்படும் இந்த விசேட போட்டிக்கு காத்தான்குடி இன்போ ஊடக அனுசரணையாளராக செயற்படவுள்ளது என்பதை எமது வாசகர்களுக்கு மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கின்றோம்.
இந்த போட்டிக்குரிய பரிசு விபரங்கள் பின்வருமாறு;
  • முதலாம் பரிசு –  1,500 சவுதி ரியால்கள்
  • இரண்டாம் பரிசு – 1,000 சவுதி ரியால்கள்
  • மூன்றாம் பரிசு – 750 சவுதி ரியால்கள்
  • நான்காம் பரிசு – 500 சவுதி ரியால்கள்
  • ஐந்தாம் பரிசு – 250 சவுதி ரியால்கள்
  • மற்றும் பல ஆறுதல் பரிசுகள்
இந்த போட்டியில் கலந்துகொள்வது மிகவும் இலகுவானதாகும். அதாவது இங்கே நாம் இரண்டு இணைப்புகளை பதிவு செய்துள்ளோம்.
அதில் முதலாவது இணைப்பில் ‘இஸ்லாத்தின் பார்வையில் ஸஹாபாக்கள்’ எனும் நூலில்  குற்றச்சாட்டுக்களும், பதில்களும்’ (பக்கம் 159 முதல் 231 வரை) எனும் பகுதி இணைக்கப்பட்டுள்ளது. இந்த பகுதியின முற்றாக படித்து இரண்டாவது இணைப்பில் உள்ள கேள்விகளுக்கு பதில் அளிக்க வேண்டும்.
மேலும், இரண்டாவது இணைப்பில் உள்ள கேள்விகள் விரிவாக நோக்கும்போது அது இரண்டு பகுதிகளை கொண்டது. அதில் பகுதி 01 க்கு (ஹாமீம்) 26 ஆவது ஜுஸ்உவிலிருந்தும், பகுதி 02 க்கு ‘இஸ்லாத்தின் பார்வையில் ஸஹாபாக்கள்’ எனும் நூலில் குற்றச்சாட்டுக்களும், (பக்கம் 159 முதல் 231 வரை) பதில்களும் எனும் பகுதியிலிருந்தும் விடையளிக்க வேண்டும்.
விதிமுறைகள்
  • பகுதி 01 க்கு (ஹாமீம்) 26 ஆவது ஜுஸ்உவிலிருந்தும், பகுதி 02 க்கு ‘இஸ்லாத்தின் பார்வையில் ஸஹாபாக்கள்’ எனும் நூலில்  குற்றச்சாட்டுக்களும், பதில்களும் எனும் பகுதியிலிருந்தும் (பக்கம் 159 முதல் 231 வரை)விடையளிக்க வேண்டும்.
  • விடைகள் யாவும் தெளிவான கையெழுத்தில் எழுதப்பட வேண்டும்.
  • தமிழ் தஃவா ஒன்றியத்தின் உறுப்பினர்களோ, அவர்களின் குடும்பத்தினரோ இதில் பங்குபற்ற முடியாது.
  • வெளிநாடுகளில் வசிப்பவர்களும் கலந்துகொள்ளலாம்.
  • ஒரு குடும்பத்தில் ஒருவர் மாத்திரமே பங்குபற்றலாம்.
  • மற்றவர் எழுதியதைப் பிரதிபன்னல் இஸ்லாத்தில் ஹராமாகும்.
  • இதே புத்தகத்திலேயே விடையளிக்கப்பட வேண்டும்.
  • விடைகள் ஏற்றுக்கொள்ளப்படும் இறுதிநாள்  20 ஷவ்வால் 1432 (18.09.2011)
  • விடைகளை கீழ்வரும் இடங்களில் வைக்கப்பட்டிருக்கும் விடைப் பெட்டிகளில் செலுத்தலாம் .
1. ஸ்ரீ லங்கா ரெஸ்டூரண்ட் – பத்ஹா
2. பூகட் ஐலண்ட் – மலஸ்
3. கொழும்பு ரெஸ்டூரண்ட் – மலஸ்
4. ரவ்ழா தஃவா நிலையம் – Exit 10
5. நிவ் ஸினாஇய்யாஹ் தஃவா நிலையம்
  • தபாலில் அனுப்ப விரும்புவோர் கீழே உள்ள முகவரிக்கு அனுப்பிவைக்க வேண்டும்:
“TAMIL DAUWA MUSABAKATHU RAMALAN” 
OLD SINAIYYAH ISLAMIC CENTER, 
P.O.BOX: 255018, 
RIYADH 11353, 
SAUDI ARABIA
  • பாக்ஸ் மூலமோ, மின்னஞ்சல் மூலமோ அனுப்பப்படும் விடைகள் நிராகரிக்கப்படும்.
  • மேலதிக விபரங்களுக்கு: 0502 451 788, 0534 327 894, 0505 189 805, 055 327 80 85
  • வினாக்களையும், ‘இஸ்லாத்தின் பார்வையில் ஸஹாபாக்கள்’ எனும் நூலையும்www.islamkalvi.comwww.kattankudi.info என்ற இணைய தளங்களின் மூலம் பெற்றுக்கொள்ளலாம்.
“இணைப்பு -1″ பதிவிறக்கம் செய்ய கீழ் உள்ள இணைப்பை  கிளிக் செய்யவும்
“இணைப்பு -2 ” பதிவிறக்கம் செய்ய கீழ் உள்ள இணைப்பை கிளிக் செய்யவும்
இணைப்புகளை பதிவிறக்கம் செய்வதில் ஏதும் இடையூறுகள் காணப்பட்டால் எமது இமெயில் முகவரியான kattankudi@yahoo.com தெரியப்படுத்தவும். அவ்வாறான வாசகர்களுக்கு இந்த இணைப்புகள் இமெயில் ஊடாக அனுப்பிவைக்கப்படும்.
நன்றி
Buy Cialis Online No Prescription href=”http://kattankudi.info/2011/08/12/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B-%E0%AE%8A%E0%AE%9F%E0%AE%95-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE/#comments” rel=”nofollow” target=”_blank”>http://kattankudi.info/2011/08/12/%E0%AE%87%

Comments

comments

Add Comment