சோனியா காந்தி நலமுடன் உள்ளார் : ராகுல் தகவல்

அறுவை சிகிச்சைக்கு பின் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி நலமுடன் இருப்பதாக ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் உள்ள மருத்துவமனையில் சோனியா காந்திக்கு சமீபத்தில் அறுவை சிகிச்சை நடந்தது.
என்ன நோய்க்காக அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது என்பது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. எனினும், கர்பப்பை வாய் புற்றுநோய்க்காக அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியானது. காங்கிரஸ் சார்பிலும் இதை மறுக்கவில்லை. சோனியா காந்தியுடன் அவரது மகனும் கட்சியின் பொது செயலாளருமான ராகுல் காந்தி, மகள் பிரியங்கா, மருமகன் வதேரா ஆகியோரும் அமெரிக்கா சென்றிருந்தனர்.

இந்நிலையில், சுதந்திர தின விழாவில் கலந்து கொள்ள ராகுல் காந்தி நேற்று முன்தினம் டெல்லி திரும்பினார். டெல்லி செங்கோட்டையில் நேற்று நடந்த சுதந்திர தின விழாவில் அவர் கலந்து கொண்டார். அப்போது, சோனியாவின் உடல் நிலை குறித்து அவரிடம் நிருபர்கள் கேட்டனர். �சோனியா காந்தி நலமுடன் உள்ளார்� என்று ராகுல் காந்தி Buy Amoxil கூறினார். மேற்கொண்டு கேள்விகளுக்கு பதில் அளிப்பதை ராகுல் தவிர்த்து விட்டார்.

Add Comment