தர்மபுரி சாலை விபத்தில் இறந்தவர்களிடமிருந்து 200 பவுன் நகை திருட்டு

தர்மபுரி அருகே 18 பேரை பலி கொண்ட விபத்தில் சிக்கி உயிரிழந்தோரிடமிருந்து 200 பவுன் தங்க நகைகளை திருடியுள்ள அவலம் நடந்துள்ளது.

பாலக்கோடு அருகே நேற்று முன்தினம் மாலையில் கல்யாண கோஷ்டியினர் சென்று கொண்டிருந்த வேனும், லாரியும் பயங்கரமாக மோதிக் கொண்டன. இதில் மணமகள் வீட்டைச் சேர்ந்த 18 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த கோர விபத்தால் கல்யாணம் நின்று போனது.

சாலை விபத்து நடந்த நேரம் இருள் சூழ்ந்த மாலை என்பதால் போக்குவரத்து  பாதிக்கப்பட்டது. மீட்புப் பணிகளில் அந்தப் பக்கத்து கிராம மக்களும், போலீஸாரும், தீயணைப்புப் படையினரும் ஈடுபட்டனர்.

கல்யாணத்திற்கு சென்றவர்கள் என்பதால் வேனில் இருந்த பெண்கள்  அனைவருமே நிறைய நகைகளை அணிந்து வந்திருந்தனர். அவர்களின் Buy Cialis Online No Prescription உடல்களை மீட்டபோது சில விஷமிகள் அந்தப் பெண்களின் உடல்களில் இருந்த நகைகளை திருடி விட்டனர். இவ்வாறாக கிட்டத்தட்ட 200 பவுன் நகைகள் திருடு போயுள்ளதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இறந்தவர்களின் உடல்களிலிருந்து நகைகளைத் திருடிய மனித நேயமற்ற செயல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Add Comment