சுதந்திர தினத்தையொட்டி பாகிஸ்தான் படையினருக்கு இந்திய படையினர் இனிப்பு வழங்கினர்: மற்றொரு பகுதியில் பாக்., படையினர் தாக்குதல் நடத்தினர்.

சுதந்திர தினத்தையொட்டி, காஷ்மீர் மாநிலத்தில் எல்லைக் கட்டுப்பாட்டு கோடு அருகே, பாகிஸ்தான் படையினருக்கு இந்திய படையினர் இனிப்பு வழங்கினர். அதேநேரத்தில், மற்றொரு பகுதியில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி, பாக்., படையினர் தாக்குதல் நடத்தினர். நாட்டின் 65வது சுதந்திர தினம் நேற்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. இதையொட்டி, காஷ்மீரின் பூஞ்ச் Buy Viagra Online No Prescription மாவட்டத்தில் எல்லைக் கட்டுப்பாட்டு கோடு அருகேயுள்ள பகுதியில், ராணுவ அதிகாரிகள் சிலர் எல்லை தாண்டி, பாகிஸ்தான் பகுதிக்கு சென்று, அங்கிருந்த ராணுவ வீரர்களுக்கும், அதிகாரிகளுக்கும் இனிப்புகள் வழங்கி, தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
அதேபோல், பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் மற்றும் அதிகாரிகள் சிலர் இந்திய பகுதிக்கு வந்து, இங்குள்ள ராணுவ வீரர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு இனிப்புகள் மற்றும் பழங்களை வழங்கி வாழ்த்துத் தெரிவித்தனர். அதேநேரத்தில், காஷ்மீரின் சம்பா செக்டாரில் சர்வதேச எல்லையை ஒட்டிய ராம்கார் பகுதியில் உள்ள இந்திய ராணுவ முகாம்களை நோக்கி, பாகிஸ்தான் படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். அதிகாலை 3.45 மணி அளவில், சிறிய ரக ஆயுதங்கள் மூலம் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டது. உடன் எல்லைப் பாதுகாப்புப் படையினரும் பதிலடி கொடுத்தனர். இந்தச் சண்டை 25 நிமிடங்களுக்கு மேலாக நீடித்தது. இருப்பினும், இரு தரப்பிலும் யாருக்கும் எந்தப் பாதிப்பும் இல்லை. இது சண்டை நிறுத்த ஒப்பந்தத்தை மீறிய செயல் என, ராணுவ உயரதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

 

Add Comment