எலக்ட்ரிக் டெட்டனேட்டர்களுடன், பாலத்திற்கு கீழ் மறைந்திருந்த இருவர் கைது: சென்னை விமான நிலையத்தை தகர்க்க திட்டமா?

சென்னை விமான நிலையத்தின் அருகே, எலக்ட்ரிக் டெட்டனேட்டர்களுடன், பாலத்திற்கு கீழ் மறைந்திருந்த, தமிழர் விடுதலைப்படையைச் சேர்ந்த இருவரை, ரோந்து போலீசார் கைது செய்துள்ளனர். “கியூ” பிரிவு போலீசார், அவர்களிடம் தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர். மும்பை வெடிகுண்டு சம்பவத்தை தொடர்ந்து, பயங்கரவாதிகளின் தாக்குதல் பட்டியலில் சென்னை விமான நிலையமும் இடம் பெற்றுள்ளதால், அங்கு பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
சுதந்திர தினத்தை முன்னிட்டு, கடந்த சில நாட்களாக சென்னை விமான நிலையத்திற்குள் பார்வையாளர்கள் செல்ல, தடை விதிக்கப்பட்டுள்ளது. ரோந்து, வாகன சோதனைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், கடந்த 13ம் தேதி நள்ளிரவு, அனகாபுத்தூர், அடையாறு ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள பாலத்தின் கீழே, இருவர் மறைந்திருந்ததை ரோந்து போலீசார் பார்த்தனர். அவர்கள் இருவரையும் சுற்றி வளைத்த போலீசார், சோதனை செய்ததில், பயங்கர பாதிப்பை ஏற்படுத்தும், “எலக்ட்ரிக் டெட்டனேட்டர்’களை வைத்திருந்தது தெரியவந்தது.

அவர்களிடம் விசாரித்ததில், சென்னை, எம்.எம்.டி.ஏ., நகரைச் சேர்ந்த ஏசுராஜ், 42, திருநீர்மலையைச் சேர்ந்த கணேசன், Buy Doxycycline 42, என்பதும், விடுதலைப்புலிகள் அமைப்பிற்கு ஆதரவளிக்கும், தமிழர் விடுதலைப் படை அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்பதும், தெரிய வந்தது. இதையடுத்து, இருவரையும், ரோந்து போலீசார், சங்கர்நகர் போலீசாரிடம் ஒப்படைத்தனர். வெடிபொருட்களுடன் இருவரும் பதுங்கியிருந்த பாலம், சென்னை விமான நிலையத்தின் மேற்கு பகுதியின், மிக அருகில் உள்ளது. எனவே இருவரும், சுதந்திர தினத்தன்று விமான நிலையத்தை வெடி வைத்து தகர்க்க திட்டமிட்டிருக்கலாம் என, போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவர்கள் இருவரிடமும், “கியூ’ பிரிவு போலீசார் துருவி, துருவி விசாரணை நடத்தினர். பின், சங்கர்நகர் போலீசார், இருவரையும் வெடிகுண்டு தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து, சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் குறித்து, “கியூ’ பிரிவு போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Add Comment