அதிமுக கூட்டணி தொடரும்: ஆர்.நல்லகண்ணு

 

தமிழகத்தில் வரும் உள்ளாட்சித் தேர்தலிலும் அதிமுக கூட்டணி தொடரும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய கட்டுப்பாட்டுக் குழுத் தலைவர் ஆர்.நல்லகண்ணு தெரிவித்தார்.
 

இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது,

தமிழக சட்டப்பேரவை தேர்தலின்போது அமைக்கப்பட்ட அதிமுக கூட்டணி, விரைவில் Bactrim No Prescription நடைபெறவுள்ள உள்ளாட்சித் தேர்தலிலும் தொடரும். தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு கூடுதலாக அதிகாரங்களை வழங்க வேண்டும். பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சிகளுக்கு நேரடித் தேர்தல் முறையைக் கொண்டு வர வேண்டும்.

ஏற்கெனவே பல முறை பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. இதை அரசு குறைக்க வேண்டும்.

இந்நிலையில், கூடுதல் சுமையாக அதிகளவு சுங்கக் கட்டணம் வசூலிக்கப்படுவதால் லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தை அறிவித்துள்ளனர்.

கட்சியின் அகில இந்திய மாநாடு கொல்கத்தாவில் 2012 மார்ச் 21, 22, 23 ஆகிய தேதிகளில் நடைபெறும். மாநில மாநாடு ராஜபாளையத்தில் விரைவில் நடைபெறும் என்றார்.

Add Comment