உண்ணாவிரதத்துக்கு அனுமதி மறுப்பது ஜனநாயக விரோதம்

புதுடெல்லி: அன்னா ஹசாரே உண்ணாவிரதத்துக்கு டெல்லி போலீசார் அனுமதி மறுப்பது ஜனநாயக விரோதம் என்று மார்க்சிஸ்ட் கருத்து தெரிவித்துள்ளது.

வலிமையான லோக்பால் அமைக்க வலியுறுத்தி, சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே இன்று முதல் காலவரையற்ற உண்ணாவிரதம் இருக்கப் போவதாக அறிவித்துள்ளார். அதற்கு டெல்லி போலீசார் அனுமதி மறுத்துள்ளனர்.
இது பற்றி, மார்க்சிஸ்ட் மூத்த தலைவர் பிருந்தா கரத் நேற்று கூறியதாவது:
லோக்பால் சட்ட மசோதா மீது ஹசாரே குழுவினரின் சில கருத்துகள் எங்கள் கட்சிக்கும் ஏற்புடையதல்ல. போராட்டக்காரர்களின் கோரிக்கைகள் ஏற்க முடியாததாக இருந்தாலும், போராட்டம் நடத்தும் உரிமையை மறுக்க கூடாது.
லோக்பால் மசோதா, நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு விட்டதால், அதற்காக போராடக் கூடாது என்று கூறுவது முழுக்க, முழுக்க ஜனநாயக விரோதமானது. காங்கிரஸ் எதிர்க்கட்சியாக buy Viagra online இருந்த போதும், மாநிலங்களில் எதிர்க்கட்சியாக உள்ள நிலையிலும் சட்ட மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, போராட்டம் நடத்தியதை அக்கட்சி மறந்து விட்டது.
இவ்வாறு பிருந்தா கரத் கூறினார்.

Add Comment