ஜெயலலிதா, விஜயகாந்த் பங்கேற்கவில்லை கவர்னர் மாளிகையில் சுதந்திர தின விருந்து

சென்னை: சுதந்திர தினவிழா தமிழக கவர்னர் மாளிகையில் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு முதல்வர் ஜெயலலிதா, எதிர்க்கட்சித் தலைவர் விஜயகாந்த் ஆகியோர் வரவில்லை.
சுதந்திர தின விழாவை முன்னிட்டு தமிழக கவர்னர் சுர்ஜித் சிங் பர்னாலா சார்பில் கிண்டி கவர்னர் மாளிகையில் நேற்று மாலை தேநீர் விருந்து நடைபெற்றது. இதில், சபாநாயகர் ஜெயக்குமார், அமைச்சர்கள் பன்னீர்செல்வம், செங்கோட்டையன், செந்தமிழன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
எதிர்க்கட்சி துணை தலைவர் பண்ரூட்டி ராமச்சந்திரன் மற்றும் அக்கட்சியை சேர்ந்த எம்எல்ஏக்கள் பார்த்தசாரதி, பாண்டியராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னாள் கவர்னர்கள் கோபால கிருஷ்ணகாந்தி (மேற்கு வங்கம்), எம்.எம்.ராஜேந்திரன் Buy Ampicillin Online No Prescription (ஒரிசா), தலைமை செயலாளர் தேபேந்திரநாத் சாரங்கி, டிஜிபி ராமானுஜம் மற்றும் போலீஸ் பயிற்சி டிஜிபி லத்திகாசரண், உளவுத்துறை ஏடிஜிபி ராஜேந்திரன், போலீஸ் பயிற்சி ஏடிஜிபி அர்ச்சனா ராமசுந்தரம், போலீஸ் கமிஷனர் திரிபாதி, தொழில் நுட்ப பிரிவு ஐஜி ஆறுமுகம் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
மேலும், முன்னாள் நீதிபதிகள் மோகன், ஏ.ஆர்.லட்சுமணன், வேளாண் விஞ்ஞானி எம்.எஸ். சுவாமி நாதன் உள்பட பலர் தேனீர் விருந்தில் கலந்து கொண்டனர்.
விருந்தில் பங்கேற்றவர்கள் கவர்னருக்கு சுதந்திர தின வாழ்த்துக்களை தெரிவித்தனர். மூவர்ண கொடியை நினைவுபடுத்தும் வகையில் மூன்று வர்ணங்களில் பலூன்களை கவர்னர் பறக்கவிட்டார்.
இந்த விழாவில் முதல்வர் ஜெயலலிதா, எதிர்க்கட்சித் தலைவர் விஜயகாந்த் ஆகியோர் கலந்து கொள்ளவில்லை.

Add Comment