ஊழல் ஒழியட்டும் தேசம் ஒளிரட்டும்

மனிதநேய மக்கள் கட்சி தலைவரும் இராமநாதபுரம் சட்டமன்ற Buy cheap Ampicillin தொகுதியின் உறுப்பினருமான பேராசிரியர் எம்.ஹெச். ஜவாஹிருல்லா அவர்களின் விடுதலை நாள் வாழ்த்துச் செய்தி:
செந்நீரும், கண்ணீரும் சிந்தி நம் முன்னோர்கள் பெற்று தந்த சுதந்திரத்தை கொண்டாடும் இந்த நன்நாளில் மனிதநேய மக்கள் கட்சி சார்பில் நாட்டினர் அனைவருக்கும் மனமார்ந்த நல்வாழ்த்துகளை தெரிவிக்கிறோம்.
வெள்ளையரை வெளியேற்றி வீர சுதந்திரம் பெற்ற தலைவர்களின் கனவுகளை நனவாக்க இந்நாளில் உறுதி மேற்கொள்வோம். பன்னாட்டு நிறுவனங்களின் வடிவில் மீண்டும் காலணி ஆதிக்கம் வந்துவிடாமல் இருக்க விழிப்புணர்வோடு பாடுபடுவோம்.
அரசியல் விடுதலையை ஆங்கிலேயரிடமிருந்து வென்றேடுத்த நாம் சமூக,பொருளாதார விடுதலையை முழுமையாக வென்றெடுக்க வேண்டியுள்ளது. இதற்காக இந்தியர் அனைவரும் இணைந்து உழைக்க வேண்டும்.
ஊழல், மதவாதம், தீண்டாமை, மது, வட்டி, வரதட்சணை, மூடநம்பிக்கை உள்ளிட்ட அனைத்து தளைகளிலிருந்தும் தேசம் விடுதலை பெறுவதற்கு தீவிரமாய் உழைக்க இந்நாளில் உறுதி மேற்கொள்வோம்.

Add Comment