ஊழலுக்கு எதிரான போராட்டத்துக்கு வெளிநாடு வாழ் இந்தியர்கள் ஆதரவு!

சமூக சேவகர் அன்னா ஹசாரே தலைமையில் ஊழலுக்கு எதிரான போராட்டத்துக்கு வெளிநாடு வாழ் இந்தியர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். ஊழலுக்கு எதிரான லோக்பால் சட்டத்தில் பிரதமர் மற்றும் நீதிபதிகளையும் விசாரிக்க வகை செய்ய வேண்டும் என வலியுறுத்தி அன்னா ஹசாரே தலைமையிலான குழுவினர் 16ம் தேதி முதல் சாகும் வரை உண்ணா விரதம் இருக்கப் போவதாக அறிவித்தனர்.
இதையடுத்து ஊழலுக்கு எதிரான போராட்டம் தீவிரமடைந்துள்ளது. இங்கிலாந்து, அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்களும் ஊழலுக்கு எதிராக வலுவான சட்டம் கொண்டுவர வேண்டும் என வலியுறுத்தி நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். ��ஊழலுக்கு எதிரான அன்னா ஹசாரேவின் போராட்டத்துக்கு இந்தியர் என்ற முறையில் வெளிநாடு வாழ் இந்தியர்கள் சாதி, மத, அரசியல் சார்பின்றி ஒத்துழைப்பு தர வேண்டும்�� என லண்டனில் போராட்டத்தில் ஈடுபட்ட வெளிநாடு Buy Lasix வாழ் இந்தியர்களில் ஒருவரான ராஜேஷ் ரெட்ஜி தெரிவித்தார்.அமெரிக்காவில் உள்ள பல்வேறு பல்கலைக்கழகங்களில் பயிலும் இந்திய மாணவர்களும் ஹசாரேவுக்கு ஆதரவாக நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். ஊழலை ஒழிக்க வலுவான சட்டம் இயற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தி, �ஊழலுக்கு எதிரான இந்தியா� என்ற அமைப்பைச் சேர்ந்தவர்கள் ஐ.நா.சபை முன்பாக நேற்று கோஷங்களை எழுப்பினர். மத்திய அரசு கொண்டுவந்துள்ள வரைவு சட்டம் வேடிக்கையானது என்றும் அவர்கள் கூறினர்.

thk

seithy

Add Comment