தோல்விக்கு நடுவர் காரணம்* தென் ஆப்ரிக்க பயிற்சியாளர் புகார்

“”உருகுவே அணிக்கு எதிரான உலககோப்பை கால்பந்து லீக் போட்டியில், தென் Buy Ampicillin ஆப்ரிக்க அணியின் தோல்விக்கு, “ரெப்ரி’ மசிமோ பசாக்காவின் மோசமான செயல்பாடுகள் தான் காரணம்,” என, தென் ஆப்ரிக்க அணியின் பயிற்சியாளர் பெரைரா கூறியுள்ளார்.

பிரிடோரியாவில் நேற்று முன் தினம் இரவு நடந்த லீக் போட்டியில், “ஏ’ பிரிவில் இடம் பெற்ற உருகுவே மற்றும் தென் ஆப்ரிக்க அணிகள் மோதின. இப்போட்டியின் “ரெப்ரியாக’ சுவிட்சர்லாந்தின் மசிமோ பசாக்கா செயல்பட்டார். முதல் பாதியில் உருகுவே அணி 1-0 என முன்னிலை பெற்றது. இரண்டாவது பாதியின், 76 வது நிமிடத்தில் கோல் அடிக்க முற்பட்ட உருகுவே வீரர் சோரசை, தென் ஆப்ரிக்க கோல் கீப்பர் இடுமிலங் குனே காலால் தட்டினார். இதனையடுத்து “ரெப்ரி’ இவருக்கு”ரெட் கார்டு’ வழங்கி வெளியேற்றினார். தவிர, உருகுவே அணிக்கு “பெனால்டி கிக்’ வாய்ப்பு கிடைத்தது. இதனை கோலாக மாற்றினார் போர்லான். ஆட்டத்தின் கடைசி நிமிடத்தில் மற்றொரு கோலடிக்க 3-0 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றது உருகுவே.

பயிற்சியாளர் கோபம்: தென் ஆப்ரிக்க அணியின் தோல்வி குறித்து பயிற்சியாளர் கார்லஸ் பெரைரா கூறியது: அணியின் தோல்விக்கு முக்கிய காரணம் “ரெப்ரி’ பசாக்கா தான். இத்தொடரின் மோசமான “ரெப்ரி’ அவர். கோல் கீப்பருக்கு “ரெட் கார்டு’ வழங்கி தவறு செய்து விட்டார் பசாக்கா. உலககோப்பை போட்டிகளுக்கு “ரெப்ரியாக’ செயல்படுவதற்கு அவருக்கு தகுதி இல்லை. இனி எந்த போட்டியிலும் அவரது முகத்தை பார்க்க நான் விரும்ப வில்லை. இப்போட்டியின் ஆரம்பம் முதலே, தென் ஆப்ரிக்க அணிக்கு எதிராக செயல்பட்டார் பசாக்கா. இவ்வாறு பெரைரா கூறினார்.

டபரேஸ் மறுப்பு: பெரைராவின் புகாருக்கு மறுப்பு தெரிவித்துள்ளார் உருகுவே அணியின் பயிற்சியாளர் ஆஸ்கர் டபரேஸ். இது குறித்து அவர் கூறுகையில்,”” ரெப்ரியின் தவறால் தான் உருகுவே அணி வெற்றி பெற்றது என்ற கருத்து ஏற்றுக் கொள்ள முடியாதது. “ரெப்ரியை’ குறை கூறுவது சரியல்ல. ஆட்டத்தின் போக்கு அப்படி அமைந்து விட்டது,” என்றார்.

இரண்டாவது முறை: உலககோப்பை அரங்கில் கோல் கீப்பருக்கு “ரெட் கார்டு’ வழங்கப்படுவது இது இரண்டாவது முறை. இதற்கு முன் கடந்த 1994 ம் ஆண்டு நடந்த உலககோப்பையில், நார்வே அணிக்கு எதிரான போட்டியின் போது, இத்தாலி கோல்கீப்பர் பாக்லியூசியாவுக்கு “ரெட் கார்டு’ வழங்கப்பட்டது.

Add Comment