கிரீஸ் அணிக்கு முதல் வெற்றி * நைஜீரியா சோகம்

உலக கோப்பை கால்பந்து அரங்கில் தனது முதல் வெற்றியை பதிவு செய்து வரலாறு படைத்தது கிரீஸ் அணி. நேற்று நடந்த லீக் போட்டியில் நைஜீரியாவை வீழ்த்தியது.

தென் ஆப்ரிக்காவில் நடக்கும் உலககோப்பை கால்பந்து தொடரின் நேற்றைய லீக் போட்டியில், “பி’ பிரிவில் இடம் பெற்ற கிரீஸ், நைஜீரியா அணிகள் மோதின.

நைஜீரியா அசத்தல்:விறுவிறுப்பாக நடந்த இப்போட்டியின் 15 வது நிமிடத்தில் கிரீஸ் வீரர் சோக்ராடிஸ் செய்த தவறால், நைஜீரியாவுக்கு “பிரீ-கிக்’ வாய்ப்பு கிடைத்தது. இதனை சரியாகப் பயன்படுத்திய நைஜீரிய வீரர் உகே, சூப்பர் கோலடித்தார் (16 வது நிமிடம்). ஆட்டத்தின் 33 வது நிமிடத்தில் கிரீஸ் வீரர் டோராசிடிசை காலால் எட்டி உதைத்த, நைஜீரிய வீரர் சானு கைட்டா “ரெட் கார்டு’ காட்டப்பட்டு வெளியேற்றப்பட்டார். Buy Viagra Online No Prescription இதனால் 10 வீரர்களுடன் விளையாட வேண்டிய நிலைக்கு ஆளானது நைஜீரிய அணி. 44 வது நிமிடத்தில் கிரீஸ் வீரர் சால்பின்கிடிஸ் கோலடிக்க, முதல் பாதியில் இரு அணிகளும் 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலையில் இருந்தன.

கிரீஸ் வெற்றி: இரண்டாவது பாதியில், கிரீஸ் அணி அபார ஆட்டத்தை வெளிப்படுத்தியது. ஆட்டத்தின் 71 வது நிமிடத்தில், ஜியோலிஸ் அடித்த பந்தை தடுக்க நினைத்த நைஜீரிய கோல் கீப்பர் இன்யாமா தவற விட்டார். வாய்ப்பை பயன்படுத்தி கண் இமைக்கும் நேரத்தில் கோலாக்கினார் டோராசிடிஸ். இதற்கு பதிலடி கொடுக்க நினைத்த நைஜீரிய அணிக்கு ஏமாற்றமே மிஞ்சியது. இறுதியில் கிரீஸ் அணி 2-1 என்ற கோல் கணக்கில் அசத்தல் வெற்றி பெற்றது.

முதல் வெற்றி: உலககோப்பை தொடருக்கு இரண்டாவது முறையாக (1994, 2010) தகுதி பெற்ற கிரீஸ் அணி, தனது முதல் வெற்றியை நேற்று பதிவு செய்துள்ளது.
——
“பிரீ-கிக்’ கோல்
தென் ஆப்ரிக்காவில் நடக்கும் உலககோப்பை தொடரில் முதல் “பிரீ-கிக்’ கோல் அடித்து அசத்தினார் நைஜீரிய வீரர் உகே. கடந்த 2006 ம் ஆண்டு ஜெர்மனியில் நடந்த உலககோப்பை தொடரில் ஈக்வேடார் அணிக்கு எதிராக இங்கிலாந்து வீரர் பெக்காம் அடித்த “பிரீ-கிக்’ கோல் அடித்திருந்தார். அதற்குப் பின் உகே இச்சாதனை படைத்துள்ளார்.

Add Comment