கடாபியுடன் பேச்சு வார்த்தை நடத்த முடியாது: போராட்டக்காரர்கள் திட்டவட்டம் !

லிபியாவில் போராட்டாக்காரர்களை கொன்று குவிக்கும் கடாபியுடன் பேச்சு வார்த்தை நடத்த முடியாது என போராட்டக்காரர்கள் திட்டவட்டமாக தெரிவித்தனர். கடாபியின் லிபிய ராணுவம் பயங்கர சேதம் ஏற்படுத்தும் ஸ்கட் ஏவுகணையை வீசிய நிலையில் போராட்டக்காரர்கள் இவ்வாறு தெரிவித்தனர். கடந்த 6 மாதமாக நடைபெற்று வரும் போராட்டத்தால் 69 வயது கடாபி தலைநகர் திரிபோலியில் தனிமைபடுத்தப்படுத்தபட்டுள்ளார்.
லிபியாவில் போராட்டம் நடத்தி வரும் குழு தேசிய மாற்றக் கவுன்சிலை அமைத்துள்ளது. இந்த குழு பிரதிநிதிகளையே பிரிட்டன், பிரான்ஸ் போன்ற நாடுகள் தூதர்களாக அங்கீகரித்துள்ளன. இந்த குழுவினர் Bactrim No Prescription கடாபியுடன் பேச்சு வார்த்தை நடத்த முடியாது என உறுதியாக கூறியுள்ளனர். இந்த குழுவின் தலைவர் முஸ்தபா அப்டல் ஜலீல் கூறுகையில்,”தமது அமைப்பு முடிவுப்படி கடாபி பதவியில் இருந்து உடனடியாக விலக வேண்டும். அவருடன் பேச்சு வார்த்தை என்பது நினைத்து பார்க்க முடியாத ஒன்று” என தெரிவித்தார்.

Add Comment