6 மாநிலங்களில் காலவரையற்ற ஸ்டிரைக்: 26 லட்சம் லாரிகள் ஓடாது!

தமிழகம் உள்ளிட்ட 6 மாநிலங்களில் லாரிகள் வேலை நிறுத்தம் இன்றிரவு தொடங்குகிறது. இதனால் 26 லட்சம் சரக்கு வாகனங்கள் இயங்காது. மத்திய, மாநில அரசுகளுக்கு தினமும் ரூ.2,500 கோடி இழப்பு ஏற்படும். தினமும் ரூ.10 ஆயிரம் கோடி சரக்குகள் தேக்கமடையும் என லாரி உரிமையாளர்கள் கூறியுள்ளனர். சரக்கு இல்லாமல் காலியாக செல்லும் வாகனங்களுக்கு 25 சதவீத சுங்க கட்டணம் மட்டுமே வசூலிக்கவேண்டும்.
இன்சூரன்ஸ், டீசல், டயர் மற்றும் உதிரிபாகங்கள் விலையை குறைக்க வேண்டும். தேசிய நெடுஞ்சாலைகளில் லாரிகளுக்கு விதிக்கப்படும் சுங்க வரியை குறைக்கவேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று நள்ளிரவு முதல் தென் மாநிலங்களில் லாரிகள் வேலை நிறுத்தம் தொடங்குகிறது. தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, கர்நாடகா, புதுச்சேரி, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் உள்ள 26 லட்சம் சரக்கு வாகனங்கள் வேலை நிறுத்தத்தில் கலந்து கொள்கின்றன.

லாரிகள் வேலை நிறுத்தத்தை முடிவுக்கு கொண்டுவர மத்திய, மாநில அரசுகள் நடத்திய பேச்சு��ர்த்தை தோல்வியில் முடிந்தது. தமிழகத்தில் பால், தண்ணீர், மருந்து பொருட்களை ஏற்றிச் செல்லும் லாரிகளுக்கு வேலை நிறுத்தத்தில் இருந்து விலக்கு அளிக்கப்படும் என மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் தெரிவித்துள்ளது. லாரிகள் வேலை நிறுத்தம் தொடர்பாக பேச்சுவார்த்தை buy Ampicillin online நடத்த வரும்படி மத்திய அரசு விடுத்த அழைப்பை லாரி உரிமையாளர்கள் புறக்கணித்துவிட்டனர்.

இதனால் இன்றிரவு லாரிகள் வேலை நிறுத்தம் தொடங்குவது உறுதியாகியுள்ளது. இதனால் காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் இருந்து வெளிமாநிலங்களுக்கு செல்லும் 1 லட்சம் லாரிகள் கடந்த 4 நாட்களாக தமிழகத்தின் பல்வேறு நகரங்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதனால் தேங்காய், ஜவுளி, தீப்பெட்டி, பட்டாசு, சிமென்ட், இரும்பு தாது உள்ளிட்ட பல கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் தேக்கம் அடைந்துள்ளன.

வேலை நிறுத்தத்துக்கு கோழி பண்ணையாளர்கள் சங்கம், மணல் லாரி உரிமையாளர்கள் சம்மேளனம், டிரெய்லர் உரிமையாளர்கள் சங்கம், எல்.பி.ஜி காஸ் டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கம் ஆகியவை ஆதரவு அளித்துள்ளன. நாமக்கல் மண்டலத்தில் தினமும் 3 கோடி முட்டைகள் உற்பத்தியாகிறது. இவை அனைத்தும் லாரி, வேன் மூலமே தமிழகம் மற்றும் கேரள மாநிலத்துக்கு கொண்டு செல்லப்படுகிறது. இன்று நள்ளிரவு முதல் லாரி வேலை நிறுத்தம் தொடங்குவதால் லாரிகளில் முட்டை அனுப்பும் பணி நேற்றே நிறுத்தப்பட்டது. இன்று முதல் நாமக்கல் மண்டலத்தில் தினமும் 3 கோடி முட்டைகள் தேக்கமடையும்.

மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளன தலைவர் நல்லதம்பி கூறியதா வது:லாரிகள் வேலைநிறுத்தம் இன்று நள்ளிரவு முதல் தமிழகம் உள்ளிட்ட 6 மாநிலங்களில் தொடங்குகிறது. வெளிமாநிலங்களுக்கு செல்லும் ஒரு லட்சம் லாரிகள் கடந்த 4 நாட்களாக இயக்கப்படவில்லை. இதனால் ஆயிரக்கணக்கான டிரைவர், கிளீனர்கள் வேலை இழந்துள்ளனர். தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்க கட்டணத்தை குறைப்பது குறித்து மத்திய அரசு எழுத்துபூர்வமாக உறுதி அளித்தால் மட்டுமே லாரிகள் வேலை நிறுத்தத்தை விலக்கி கொள்வது பற்றி முடிவு எடுக்கப்படும்.

இரண்டு முறை மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தியும் சுமூக முடிவு ஏற்படவில்லை. லாரி உரிமையாளர்களின் பிரச்னையை தீர்க்க மத்திய அரசு முன்வரவில்லை. இதனால், தமிழகம் உள்ளிட்ட 6 மாநிலங்களிலும் வேலை நிறுத்தம் தீவிரப்படுத்தப்படும். தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட லாரி சங்க நிர்வாகிகளும் போராட்டத்தில் தீவிரமாக ஈடுபட உள்ளனர்.

லாரிகள் வேலை நிறுத்தத்தால் மத்திய, மாநில அரசுகளுக்கு தினமும் நேரடியாகவும், மறைமுகமாகவும் ரூ.2500 கோடி இழப்பு ஏற்படும். லாரி உரிமையாளர்களுக்கு தினமும் ரூ.1000 கோடி இழப்பு ஏற்படும். போராட்டத்துக்கு தமிழகத்தில் உள்ள 123 லாரி உரிமையாளர் சங்கங்கள் ஆதரவு தெரிவித்துள்ளன. இவ்வாறு நல்லதம்பி கூறினர்.

காஸ் டேங்கர் லாரிகள் தார்மீக ஆதரவு: தென் மண்டல எல்.பி.ஜி காஸ் டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்க தலைவர் பொன்னம்பலம் கூறுகையில், ��எல்.பி.ஜி சங்கம் லாரிகள் வேலை நிறுத்தத்துக்கு தார்மீக ஆதரவு அளிக்கிறது. லாரிகள் வேலை நிறுத்தத்தின் காரணமாக எங்களால் காஸ் டேங்கர் லாரிகளை இயக்க முடியாத சூழ்நிலை ஏற்படுகிறது. லாரி உரிமையாளர்களின் கோரிக்கையை உடனடியாக மத்திய அரசு ஏற்கவேண்டும்�� என்றார்.

9,000 டிரெய்லர் நிறுத்தம்

நாமக்கல் டிரெய்லர் உரிமையாளர்கள் சங்க தலைவர் சுந்தர்ராஜன் கூறுகையில், ��லாரிகள் வேலை நிறுத்தத்துக்கு ஆதரவாக தமிழகத்தில் உள்ள 9,000 டிரெய்லர் லாரிகளும் நிறுத்தப்படுகின்றன. இதன் காரணமாக சிமென்ட் தொழிற்சாலை, சர்க்கரை ஆலை, அனல் மின்சார உற்பத்தி நிலையங்களுக்கு கொண்டு செல்ல வேண்டிய கடினமான இரும்பு பொருட்களை கொண்டு செல்லும் பணி நிறுத்தப்பட்டுவிட்டது. டிரெய்லர் லாரி டிரைவர்கள், கிளீனர்களும் வேலை இழந்துள்ளனர். வேலை நிறுத்தத்தை முடிவுக்கு கொண்டு வர மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்�� என்றார்.

மணல் லாரிகள் 19ம் தேதி இயங்காது

மாநில மணல் லாரி உரிமையாளர்கள் சம்மேளன தலைவர் செல்ல.ராசாமணி கூறுகையில், ��லாரிகள் வேலை நிறுத்தத்துக்கு ஆதரவு தெரிவித்து வரும் 19ம் தேதி மட்டும் மணல் லாரிகள் இயக்கப்படாது. மணல் லாரிகள் தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டால் மணல் விலை உயரும். இதை தவிர்க்கவே ஒரு நாள் மட்டும் ஆதரவு அளிக்கப்படுகிறது�� என்றார்.

Add Comment