ஜெட் ஏர்வேஸ் விமானத்துக்கு தொலை பேசியில் வெடிகுண்டு மிரட்டல்!

மும்பையில் இருந்து புறப்படவிருந்த ஜெட் ஏர்வேஸ் விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததால் சில மணி நேரம் தாமதத்துக்கு பிறகு அந்த விமானம் புறப்பட்டுச் சென்றது. நேற்றுமுன்தினம் இரவு மும்பைதோகா ஜெட் ஏர்வேஸ் விமானம் ஒன்று (ஃப்ளைட் 9டபிள்யூ 552) மும்பை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்பட தயாராக நின்று கொண்டிருந்தது.
இரவு 8.25 மணிக்கு புறப்பட வேண்டும்.ஆனால் புறப்படுவதற்கு ஒரு சில நிமிடங்கள் இருக்கும்போது, அந்த விமானத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக தொலை பேசியில் மிரட்டல் வந்தது. இதைத் தொடர்ந்து விமானம் புறப்படுவது நிறுத்தப்பட்டது.பின்னர் அந்த விமானம் தனி பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டு பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக இறக்கிவிடப்பட்டனர். மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் அந்த விமானத்தை ஒரு இடம் விடாமல் சோதனையிட்டனர். எனினும் வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை. சில மணி நேரம் தாமதத்திற்கு பிறகு அந்த விமானம் தோகா புறப்பட்டுச் சென்றதாக ஜெட் ஏர்வேஸ் செய்தித் Lasix No Prescription தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார்.

Add Comment