ஹிகுவேன் “ஹாட்ரிக்’: அர்ஜென்டினா விஸ்வரூபம்! * தென் கொரியா பரிதாப தோல்வி

உலக கோப்பை லீக் போட்டியில் ஹிகுவேன் “ஹாட்ரிக்’ கோல் அடிக்க, அர்ஜென்டினா அணி, தென் கொரியாவை 4-1 என்ற கோல் கணக்கில் சூப்பராக வீழ்த்தியது. இதன் மூலம் “நாக் அவுட்’ முறையிலான அடுத்த சுற்றுக்கு முன்னேறியது. இப்போட்டியில் “சேம் சைடு கோல்’ அடித்த தென் கொரிய அணி படுதோல்வி அடைந்தது.

Buy Levitra style=”text-align: justify;”>தென் ஆப்ரிக்காவில் 19வது உலக கோப்பை தொடர் நடக்கிறது. நேற்று ஜோகனஸ்பர்க்கில் உள்ள சாக்கர் சிட்டி மைதானத்தில் நடந்த “பி’ பிரிவு லீக் போட்டியில் இரண்டு முறை உலக சாம்பியனான அர்ஜென்டினா அணி, ஆசியாவின் தென் கொரியாவை எதிர்கொண்டது.

வெற்றி துவக்கம்: உலக கால்பந்து ரேங்கிங் பட்டியலில் 7வது இடத்தில் உள்ள அர்ஜென்டினா அணி, இம்முறை முதல் போட்டியில் நைஜீரியாவை வீழ்த்தியது. இதே போல ரேங்கிங் பட்டியலில் 47வது இடத்தில் உள்ள தென் கொரியா, கிரீஸ் அணியை வென்றது. இரு அணிகளும் துவக்கத்தில் வெற்றி பெற்ற உற்சாகத்தில் களமிறங்கின.

அர்ஜென்டினா ஆதிக்கம்: ஆரம்பத்தில் இருந்தே அர்ஜென்டினா ஆதிக்கம் செலுத்தியது. இரண்டாவது நிமிடத்தில் கிடைத்த “பிரீகிக்’ வாய்ப்பை மெஸ்சி வீணாக்கினார். பின் ஹெய்ன்ஸ், கார்லஸ் டெவேஸ், டி மரியா அடங்கிய கூட்டணி கலக்கியது. இவர்களது அதிரடி ஆட்டத்தில் தென் கொரிய அணி கதிகலங்கிப் போனது.

“சேம் சைடு கோல்’: ஆட்டத்தின் 17வது நிமிடத்தில் அந்த சோகம் அரங்கேறியது. “பிரீகிக்’ வாய்ப்பு மூலம், கோல் போஸ்டில் இருந்து 30 மீட்டர் தூரத்தில் பந்தை அடித்தார் மெஸ்சி. அது மற்றொரு அர்ஜென்டினா வீரர் டெமிக்கலிஸ் காலில் பட்டு பறந்தது. இதனை தடுக்க முயன்றார் தென் கொரிய வீரர் சு யங் பார்க். ஆனால், பந்து இவரது வலது காலில் பட்டு, கோல் போஸ்டுக்குள் நுழைய, “சேம் சைடு கோலாக’ மாறியது. இதையடுத்து அர்ஜென்டினா 1-0 என முன்னிலை பெற்றது. பார்க் செய்த மாபெரும் தவறால், தென் கொரிய அணியினர் சோகத்தில் மூழ்கினர்.

இதற்கு பின் அர்ஜென்டினாவின் ஹிகுவேன் கலக்கினார். இவர், ஆட்டத்தின் 33வது நிமிடத்தில் தலையால் முட்டி ஒரு சூப்பர் கோல் அடித்தார். இதற்கு 46வது நிமிடத்தில் தென் கொரியாவின் சங் யாங் லீ, ஒரு கோல் அடித்து பதிலடி கொடுத்தார். முதல் பாதி முடிவில் அர்ஜென்டினா அணி 2-1 என முன்னிலை பெற்று இருந்தது.

ஹிகுவேன் தாக்குதல்: இரண்டாவது பாதியிலும் ஹிகுவேன் அசத்தினார். ஆட்டத்தின் 76வது நிமிடத்தில் பந்தை மின்னல் வேகத்தில் மெஸ்சி அடித்தார். இதனை தென் கொரிய கீப்பர் தடுக்க முயல, பந்து போஸ்டில் பட்டுச் சென்றது. மறுபக்கம் காத்திருந்த ஹகுவேன், மிகவும் “கூலாக’ பந்தை கோல் போஸ்டுக்குள் உதைக்க, அர்ஜென்டினா 3வது கோல் அடித்தது. பின் 80வது நிமிடத்தில் மீண்டும் கலக்கினார் ஹிகுவேன். இம்முறை தலையால் முட்டி ஒரு அற்புதமான கோல் அடித்தார். இதன் மூலம் இப்போட்டியில் தொடர்ந்து மூன்று கோல் அடித்து “ஹாட்ரிக்’ சாதனை படைத்தார். இறுதியில் அர்ஜென்டினா 4-1 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி, பெற்றது. இதன் மூலம் 6 புள்ளிகளுடன்(2 வெற்றி) 16 அணிகள் மோதும் “நாக் அவுட்’ முறையிலான அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றது.
வரும் 26ம் தேதி நடக்கும் நைஜீரியாவுக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே தென் கொரிய அணி, அடுத்த சுற்றுக்கு முன்னேற முடியும்.
இப்போட்டியில் 3 கோல் அடித்த ஹிகுவேன் ஆட்ட நாயகன் விருதை தட்டிச் சென்றார்.
————-
முன்றாவது வீரர்
உலக கோப்பை வரலாற்றில் “ஹாட்ரிக்’ கோல் அடிக்கும் 49வது வீரர் என்ற பெருமை பெற்றார் ஹிகுவேன். அர்ஜென்டினா சார்பில் மூன்றாவது வீரரானார். இதற்கு முன் இந்த அணியின் கிலர்மோ ஸ்டாபிலி(1930, எதிர் மெக்சிகோ), காப்ரியலா பாடிஸ்டுடா இச்சாதனை படைத்துள்ளனர். இதில் பாடிஸ்டுõ இரு முறை (1994, எதிர், கிரீஸ். 1998, எதிர் ஜமைக்கா ) சாதித்துள்ளார்.
* இத்தொடரில் முதல் “ஹாட்ரிக்’ கோல் அடித்த ஹிகுவேன், இம்முறை அதிக கோல் அடித்துள்ளவர்கள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார்.
———–
தொடருமா ராசி
கடந்த 1986ல் நடந்த உலக கோப்பை லீக் போட்டியில் மாரடோனா தலைமையிலான அர்ஜென்டினா அணி, தென் கொரியாவை வீழ்த்தியது. அப்போது உலக கோப்பை வென்றது. தற்போது அர்ஜென்டினா அணியின் பயிற்சியாளராக மாரடோனா உள்ளார். இம்முறையும் தென் கொரியாவை வென்றுள்ளது. 1986 போல் கோப்பை வெல்லுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
——–
மெஸ்சி ரொம்ப “பிசி’
அர்ஜென்டிõ அணியின் நட்சத்திர வீரரான மெஸ்சி நேற்றும் அசத்தினார். மின்னல் வேகத்தில் ஆடிய இவர், முன்களத்தில் மிகவும் “பிசி’யாக இருந்தார். பல முறை கோல் வாய்ப்புகளை நூலிழையில் நழுவ விட்ட இவர், கடைசி கட்டத்தில் ஹிகுவேன் கோல் அடிக்க உதவினார்.

Add Comment