உலககோப்பை: சிக்கலில் பிரான்ஸ் அணி* மெக்சிகோ அசத்தல் வெற்றி

உலககோப்பை கால்பந்து தொடரிலிருந்து வெளியேறும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது முன்னாள் சாம்பியன் (1998) பிரான்ஸ் அணி. நேற்று நடந்த லீக் போட்டியில், பிரான்ஸ் அணி, மெக்சிகோவிடம் 0-2 என்ற கோல் கணக்கில் அதிர்ச்சி தோல்வி அடைந்தது.

தென் ஆப்ரிக்காவில் உலககோப்பை கால்பந்து தொடர் நடக்கிறது. போலாக்வானியில் நேற்று நடந்த லீக் போட்டியில், “ஏ’ பிரிவில் இடம் பெற்ற பிரான்ஸ், மெக்சிகோ அணிகள் மோதின.

பிரான்ஸ் ஏமாற்றம்: இப்போட்டியின் துவக்கம் முதலே இரு அணிகளும் கோல் அடிக்க கடுமையாகப் போராடின. நான்கு முறை (3, 10, 24, 31 வது நிமிடம்) “கார்னர் கிக்’ வாய்ப்புகளை கோட்டை விட்டது பிரான்ஸ் அணி. 4 வது நிமிடத்தில் முரட்டாட்டம் ஆடிய மெக்சிகோ வீரர் பிரான்கோ “எல்லோ கார்டு’ பெற்றார். எவ்ரா, ரிபரி, கல்லாஸ் உள்ளிட்ட பிரான்ஸ் அணியின் நட்சத்திர வீரர்கள் எதிர்பார்த்த அளவுக்கு விளையாட வில்லை. முதல் பாதியில் இரு அணிகளும் கோல் எதுவும் அடிக்க வில்லை.

மெக்சிகோ மிரட்டல்: இரண்டாவது பாதியில் மெக்சிகோ அணி அபாரமாக ஆடியது. 64 வது மெக்சிகோ வீரர் ஹெர்னாண்டஸ் சூப்பர் கோலடித்தார். இந்த சமயத்தில் பிரான்ஸ் வீரர் ஒருவர் கூட தற்காப்பு பகுதியில் இல்லை. இது பிரான்ஸ் அணியின் படுமோசமான ஆட்டத்தை காட்டியது. இதனையடுத்து 78 வது நிமிடத்தில் மெக்சிகோ வீரர் பெரேராவை, பெனால்டி ஏரியாவில் காலால் Amoxil No Prescription தட்டினார் பிரான்ஸ் வீரர் அபிடால். இதனால் மெக்சிகோவுக்கு “பெனால்டி கிக்’ வாய்ப்பு கிடைத்தது. இதை கோலாக மாற்றினார் பிளான்கோ. தொடர்ந்து மோசமாக ஆடிய பிரான்ஸ் அணியால் கோல் எதுவும் அடிக்க முடியவில்லை. இறுதியில் 2-0 என்ற கோல் கணக்கில் மெக்சிகோ வெற்றி பெற்றது.

வாய்ப்பு இல்லை: இப்போட்டியில் தோல்வி அடைந்த பிரான்ஸ் அணி, “ரவுண்ட் ஆப் 16′ சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை கிட்டத்தட்ட இழந்து விட்டது. இருப்பினும் ஏதாவது அதிசயம் நடந்தால் பிரான்ஸ் அடுத்த சுற்றுக்கு முன்னேறலாம். தனது அடுத்த போட்டியில் பிரான்ஸ் அணி, தென் ஆப்ரிக்காவை அதிக கோல் வித்தியாசத்தில் வீழ்த்த வேண்டும். அதே சமயம் மெக்சிகோ, உருகுவே அணிகள் மோதும் போட்டியில், ஏதாவது ஒரு அணி வெற்றி பெற வேண்டும். ஒரு வேளை இப்போட்டி “டிரா’ ஆனால் பிரான்ஸ் வாய்ப்பு பறிபோகும். “ஏ’ பிரிவிலிருந்து மெக்சிகோ, உருகுவே அணிகள் அடுத்து சுற்றுக்கு முன்னேறும்.

Add Comment