பைனலுக்கு முன்னேறுமா இலங்கை* வங்கதேசத்துடன் இன்று மோதல்

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் இன்றைய போட்டியில் இலங்கை, வங்கதேசம் அணிகள் மோதுகின்றன. இதில் இலங்கை அணி வெற்றி பெறும் பட்சத்தில், முதல் அணியாக பைனலுக்கு முன்னேறிவிடும்.

இலங்கையில், ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் நடக்கிறது. தம்புலாவில் இன்று நடக்கும் போட்டியில், “நடப்பு சாம்பியன்’ இலங்கை அணி, வங்கதேச அணியை சந்திக்கிறது.

கட்டாய வெற்றி: தொடரின் முதல் போட்டியில் பாகிஸ்தான் அணியை வீழ்த்திய இலங்கை அணி, இன்றைய போட்டியில் வெற்றி பெறும் பட்சத்தில் முதல் அணியாக பைனலுக்கு முன்னேறிவிடும். நேற்று முன்தினம் நடந்த 2வது போட்டியில் வங்கதேச அணி, இந்தியாவிடம் தோல்வியடைந்திருப்பதால், பைனல் வாய்ப்பை தக்க வைத்துக் கொள்ள, இன்று வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

மாத்யூஸ் அபாரம்: இலங்கை அணியின் பேட்டிங் வரிசை பலமாக உள்ளது. இருப்பினும் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் உபுல் தரங்கா, தில்ஷன் ஜோடி மோசமான துவக்கம் கொடுத்தது. இன்றைய போட்டியில் இவர்கள் சாதிக்கும் பட்சத்தில் வலுவான இலக்கை நிர்ணயிக்கலாம். கேப்டன் buy Viagra online சங்ககரா, மகிலா ஜெயவர்தனா, சமரவீரா உள்ளிட்டோர் நல்ல “பார்மில்’ இருப்பது கூடுதல் பலம். ஜிம்பாப்வே தொடரில் அசத்திய மாத்யூஸ், இத்தொடரி<லும் நம்பிக்கை அளித்து வருவது சாதகமான விஷயம்.

மலிங்கா துல்லியம்: பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இலங்கை அணியின் பேட்டிங் கைகொடுக்காத பட்சத்தில், பவுலிங்கில் சாதித்தது வெற்றிக்கு முக்கிய காரணம். இதில் லசித் மலிங்காவில் துல்லிய பந்துவீச்சு எதிரணிக்கு பெரும் சிக்கலாக உள்ளது. இவருக்கு குலசேகரா, மாத்யூஸ், மகரூப் உள்ளிட்ட வேகங்கள் நம்பிக்கை அளித்து வருவது கூடுதல் பலம். சுழலில் முரளிதரன் நம்பிக்கை அளிப்பது சிறப்பம்சம்.

தமிம் நம்பிக்கை: இந்தியாவுக்கு எதிரான போட்டியில் தமிம் இக்பால், இம்ருல் கெய்ஸ் ஜோடி அதிரடி துவக்கம் கொடுத்தது. இன்றைய போட்டியிலும் இது தொடர்ந்தால், இலங்கை அணியை எளிதாக வீழ்த்தலாம். இருப்பினும் “மிடில்-ஆர்டரில்’ களமிறங்கிய அஷ்ரபுல், முஷ்பிகுர், கேப்டன் சாகிப் அல் ஹசன், மகமதுல்லா உள்ளிட்டோர் கைகொடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.

மொர்டசா எதிர்பார்ப்பு: வங்கதேச அணியின் வேகத்தில் மொர்டசா நம்பிக்கை அளிக்கிறார். சுழலில் கேப்டன் சாகிப் அல் ஹசன் சிறப்பாக செயல்படுகிறார். இவர்களுக்கு மற்ற பவுலர்கள் ஒத்துழைப்பு தரும் பட்சத்தில், எந்த ஒரு அணியையும் சுலபமாக வீழ்த்த முடியும்.
இரு அணிகளும் வெற்றியை நோக்கி களமிறங்குவதால், போட்டியின் விறுவிறுப்புக்கு பஞ்சமிருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது.

Add Comment