ராஜீவ் பிறந்த தினம்: முதல்வர் நல்லிணக்க உறுதிமொழி

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி பிறந்தநாளை முன்னிட்டு தமிழக அரசின் சார்பில் முதல்வர்  ஜெயலலிதா முன்னிலையில் இன்று சென்னன செயின்ட் Buy Bactrim Online No Prescription ஜார்ஜ் கோட்டையில் கோட்டையில் நல்லிணக்க நாள் உறுதிமொழி ஏற்கப்பட்டது.


ஒவ்வொரு ஆண்டும் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி பிறந்தநாள் அன்று நாடு முழுவதும் நல்லிணக்க நாள் உறுதிமொழி ஏற்கப்படும்.

தமிழக அரசின் சார்பில் இன்று கோட்டை ராணுவ பயிற்சி மைதானத்தில் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

அந்த வளாகத்தில் ராஜீவ் காந்தியின் திருவுருவப் படம் மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தது.

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க வருகை தந்த முதல்வர் ஜெயலலிதா, ராஜீவ் காந்தி திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

பின்னர் நல்லிணக்க நாள் உறுதிமொழியை முதலமைச்சர் வாசிக்க அதை அங்கு திரளாக கூடியிருந்த அமைச்சர்களும், தலைமை செயலாளர் உள்ளிட்ட அரசுத் துறை அமைச்சர்களும், சட்டமன்ற உறுப்பினர்களும் தலைமை செயலாளர் உள்ளிட்ட அரசுத் துறை செயலாளர்களும், தலைமை செயலக பணியாளர்களும் திரும்ப சொல்லி உறுதி ஏற்றனர்.

இந்த உறுதி ஏற்பு நிகழ்ச்சிக்காக இன்று பகல் 10.45 மணி முதல் 11.15 மணி வரையிலும் 30 நிமிடங்கள் சட்டமன்ற நடவடிக்கைகள் ஒத்திவைக்கப்பட்டது.

Add Comment