தண்டவாளத்தில் பாறாங்கல்: தண்டவாளத்தில் பாறாங்கல்: ரயில் மோதியது-சென்னை ரயிலை கவிழ்க்க சதி

ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே தண்டவாளத்தில் பாறாங்கல்லை வைத்து ரயிலை கவிழ்க்க முயற்சி நடந்ததது.

நேற்றிரவு கோவையில் இருந்து ஈரோடுக்கு சென்று கொண்டிருந்த சரக்கு ரயில் இரவு 8 மணியளவில் பெருந்துறை-ஊத்துக்குளி ரயில் நிலையங்களுக்கு இடையே வாய்ப்பாடி என்ற இடத்தில் சென்றபோது தண்டவாளத்தில் வைக்கப்பட்டிருந்த பாறாங்கல் மீது மோதியது.

அப்போது பெரும் சத்தம் எழுந்ததுடன் ரயிலும் குலுங்கியது. இதையடுத்து என்ஜின் டிரைவர் ரயிலை நிறுத்தினார்.

ரயில் மோதியதில் பாறாங்கல் சுக்குநூறாக உடைந்தது.

இது குறித்து டிரைவர் அருகில் உள்ள விஜயமங்கலம் ரயில் நிலைய ஸ்டேஷன் மாஸ்டரிடம் புகார் செய்துவிட்டு ரயிலை கிளப்பிச் சென்றார்.

தகவல் கிடைத்ததும் ரயில்வே அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தண்டவாளம் சேதமடைந்துள்ளதா என்று சோதனை நடத்தினர். ஆனால், தண்டவாளத்துக்கு சேதம் ஏதும் இல்லை என்று தெரியவந்தது.

இதையடுத்து அந்தப் பாதையில் பிற ரயில்கள் செல்ல அனுமதிக்கப்பட்டது.

பாறாங்கல் வைக்கப்பட்டிருந்த தண்டவாளம் வழியாகத்தான் சென்னையில் இருந்து கோவை மற்றும் கேரளாவுக்கு ரயில்கள் செல்கின்றன. இதனால் சென்னை ரயில் எதையே கவிழ்க்கும் சதித் திட்டத்துடன் தான் பாறாங்கல் buy Doxycycline online வைக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படுகிறது.

தண்டவாளத்தில் பாறாங்கல் வைத்த கும்பல் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையடுத்து ஈரோடு-திருப்பூர் ரயில் பாதைகளில் ரோந்து அதிகரிக்கப்பட்டுள்ளது.

கடந்த வாரம் விழுப்புரம் அருகே ரயில் தண்டவாளம் குண்டு வைத்து தகர்க்கப்பட்டது. இதில் மலைக்கோட்டை எக்ஸ்பிரஸ் ரயில் அதிர்ஷ்டவசமாக தப்பியது. இந்த வழக்கில் இன்னும் துப்பு துலங்காத நிலையில் நிலையில் ஈரோடு அருகே ரயிலை கவிழ்க்க பயங்கர சதி நடந்துள்ளது.

காவல் துறைக்கு அரசியல் நெருக்கடி-பாஜக:

விழுப்புரம் அருகே ரயில் தண்டவாளம் தகர்க்கப்பட்ட சம்பவத்தில் தமிழக காவல் துறை சுதந்திரமாக செயல்பட முடியாத அளவுக்கு அரசியல் நெருக்கடி இருப்பதாக தமிழக பாஜக தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் குற்றம் சாட்டியுள்ளார்.

அவர் வெளியிட்ட அறிக்கையில், சம்பவம் நடந்து 6 நாட்களாகியும் குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை. சம்பவம் குறித்து தமிழக காவல்துறை தரும் தகவல்களுக்கும், ரயில்வே போலீஸார் தரும் தகவல்களுக்கும் நிறைய வித்தியாசங்கள் உள்ளன.

இந்த விஷயத்தில் சுதந்திரமாக செயல்பட முடியாத அளவுக்கு தமிழக காவல் துறைக்கு அரசியல் நெருக்கடி இருப்பதாக அறிகிறேன் என்று கூறியுள்ளார்.

ஈழத்தமிழர் ஆதரவாளர்கள் ஈடுபடமாட்டார்கள்-நெடுமாறன்:

ஈழத் தமிழர்களின் ஆதரவாளர்கள் ஒருபோதும் மக்களுக்கு எதிரான செயல்களில் ஈடுபடமாட்டார்கள் என்று தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், விழுப்புரம் அருகே ரயில் தண்டவாளம் வெடிகுண்டு வைத்துத் தகர்க்கப்பட்ட சம்பவத்தையொட்டி தமிழர் தேசிய இயக்கத்தைச் சேர்ந்த 10 இளைஞர்களை காவல்துறை கைது செய்து, 4 நாள்களாக விசாரணை என்ற பெயரால் மறைத்து வைத்து, சட்ட விரோதமாக நடந்து கொண்டதை உயர்நீதிமன்றம் கடுமையாக கண்டித்துள்ளது.

விழுப்புரம் குண்டு வெடிப்பு சம்பவத்தில் காவல்துறையின் உயர் அதிகாரிகள் வெளியிட்ட செய்திகளே ஒன்றுக்கொன்று முரணாக உள்ளது. ஈழத் தமிழர்களின் ஆதரவாளர்கள் ஒருபோதும் மக்களுக்கு எதிரான செயல்களில் ஈடுபட்டதேயில்லை, ஈடுபடவும் மாட்டார்கள். அவர்கள் மக்களுக்காகப் போராடுபவர்கள்.

தமிழ்நாட்டில் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக மீண்டும் வளர்ந்து வரும் எழுச்சியைத் தடுத்து ஈழ ஆதரவாளர்களின் மீது கடும் ஒடுக்குமுறையை ஏவி விடுவதற்கு வகுக்கப்பட்டத் திட்டம் தான் இந்த குண்டுவெடிப்பு சம்பவம்.

இதுபோன்ற செயல்களால் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவான எழுச்சியை ஒருபோதும் தடுத்துவிட முடியாது என்பதை தமிழக முதல்வர் கருணாநிதி உணர வேண்டும். பெரு நெருப்பு என வளர்ந்து வரும் தமிழர் எழுச்சியை அணைக்க முயற்சிப்பவர்கள் யாராக இருந்தாலும் பொசுங்கிப் போவார்கள் என்று எச்சரிக்கிறேன் என்று கூறியுள்ளார்.

Add Comment