காங்கிரசை பலவீனப்படுத்த நினைக்கும் கோஷ்டி தலைவர்கள்! யசோதாவின் பேச்சால் பரபரப்பு!

தமிழக காங்கிரஸ் அறக்கட்டளை சார்பில், மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி தேனாம்பேட்டை காமராஜர் அரங்கத்தில் தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு தலைமையில் நேற்று நடந்தது. இதில் முன்னாள் எம்எல்ஏ யசோதா பேசியதாவது:காங்கிரஸ் கட்சியில் இருந்து கொண்டே கட்சி வளர்ச்சி குறித்து அக்கறை இல்லாமல், காங்கிரசை பலவீனப்படுத்த சில தலைவர்கள் செயல்படுகிறார்கள். காங்கிரசை மாற்றுக் கட்சியினர் யாரும் Levitra online இழிவுபடுத்தவில்லை. காங்கிரஸ்காரர்களே இழிவுபடுத்துகிறார்கள்.
காங்கிரஸ் அறக்கட்டளை பணம் தவறாக பயன்படுத்தப்படுகிறது என்றும், விரயமாக்கப்படுகிறது என்றும் சிலர் அறிக்கையும் பேட்டியும் கொடுக்கிறார்கள். அறக்கட்டளை பணத்திற்கு கணக்கு உள்ளது. தவறாக எதற்கும் பயன்படுத்தவில்லை. தனிப்பட்ட என் மீது வேண்டுமானால் வசை பாடட்டும். காங்கிரஸ் இயக்கத்தை பலவீனப்படுத்த வேண்டாம். காங்கிரஸ் கட்சி இப்போது ரொம்ப சிரமமான சூழலில் உள்ளது. தமிழகத்தில் மட்டுமல்ல, அகில இந்திய அளவிலும் இந்த சூழல் உள்ளது. தமிழகத்தில் அடையாளம் காட்டக்கூடிய தலைவர்கள் காங்கிரசில் இல்லை. திமுக தயவில்தான் மத்தியில் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. இவ்வாறு யசோதா பேசினார்.]

Add Comment