தாலிபான்கள் பிடியில் பணயக் கைதிகளாக 35 பாகிஸ்தான் வீரர்கள்

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் எல்லையோர சோதனைச் சாவடியில் தலிபான் தீவிரவாதிகள்  அதிரடித் தாக்குதல்நடத்தி 10 வீரர்களை பிணைக் Amoxil online கைதிகளாக பிடித்துச் சென்றனர். மேலும் 35 வீரர்களைக் காணவில்லை.

மொஹ்மந்த் மற்றும் பஜௌர் பழங்குடி இனப் பகுதிகளுக்கு இடையில் உள்ள சோதனைச் சாவடியில் கடந்த திங்கட்கிழமை அன்று தாக்குதல் நடந்துள்ளதாகவும், இதில் 40 வீரர்களை காணவில்லை என்றும் பாகிஸ்தான் தலைமை ராணுவ பிரதிநிதி பேச்சாளர் மேஜர் ஜெனரல் அத்தர் அப்பாஸ் உறுதிப்படுத்தியுள்ளார்.

ஆபகானிஸ்தான் நங்கர்ஹர் பகுதியில் உள்ள ஜலாலாபாத் பாகிஸ்தான் தூதரகத்தில் 5 வீரர்களை தலிபான்கள் ஒப்படைத்ததாகவும் மற்ற 35 வீரர்கள் என்ன ஆனார்கள் என்று தெரியவில்லை என்றும் அப்பாஸ் தெரிவித்தார். மேலும் காணாமல் போனவர்களை தேடும் பணி நடந்து வருவதாகவும் அவர் கூறினார்.

பழங்குடி இனப் பகுதியில் உள்ள சோதனைச் சாவடிகளை தலிபான்கள் தாக்குவது புதிதல்ல. இருப்பினும் பாகிஸ்தான் வீரர்களை பணயக்கைதிகளாக பிடித்துள்ளது இதுவே முதல் முறை.

இதுகுறித்து பிபிசிக்கு அளித்த பேட்டியில் தலிபான்களின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், 30 பாக்ஸ்தான் வீரர்களை ஆபகானிஸ்தானிலும், 10 பேரை பாகிஸ்தானிலும் பிடித்து வைத்துள்ளோம். தாக்குதலில் 7 பேரை எங்களது போராளிகள் கொன்று விட்டதாக தெரிவித்தார்.

சண்டையில் தப்பி 9 பாகிஸ்தான் தலிபான்களை ஆப்கான் ராணுவம் கைது செய்துள்ளதாக குனார் பகுதி போலீஸ் அதிகாரி கலீலுல்லா கூறினார்.

தலிபான்களின் பல்வேறு பிரிவினர் நங்கர்காரிலிருந்து செயல்படுகின்றனர். மேலும், மொஹ்மந்த் மற்றும் பஜௌர் பகுதிகளில் தான் பயிற்சி பெறுகின்றன.

Add Comment