விவசாயிகளுக்காகப் போராட்டம்: இளைஞர்களுக்கு ஹசாரே அழைப்பு

லோக்பாலுடன் எனது போராட்டம் நின்றுவிடாது. தேர்தல் சீர்திருத்தத்தைக் கொண்டு வருவதற்கும், விவசாயிகளின் நலன் காக்கவும் தொடர்ந்து போராடுவேன் என்று சமூக சேவகர் அண்ணா ஹசாரே தெரிவித்தார். தேசத்தின் நலன் கருதி இந்தப் போராட்டங்களை முன்னெடுத்துச் செல்ல மாபெரும் சக்தியாக உள்ள இளைஞர் சமுதாயம் தயாராக இருக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

ஊழலை ஒழிக்க வலுவான லோக்பால் சட்டம் கோரி காந்தியவாதியான அண்ணா ஹசாரே தில்லி ராம்லீலா மைதானத்தில் உண்ணாவிரதம் இருந்து வருகிறார். சனிக்கிழமை 5-வது நாளாக உண்ணாவிரதத்தைத் தொடர்ந்த ஹசாரே, ராம்லீலா மைதானத்தில் திரண்டிருந்த தனது ஆயிரக்கணக்கான ஆதரவாளர்கள் மத்தியில் ஆற்றிய உரையின் சுருக்கம்:

 

ஊழல் அனைத்து நிலைகளிலும் பரவியுள்ளது. சமுதாயத்தைச் சீரழிக்கும் இந்தக் கிருமியை அடியோடு ஒழிக்க வேண்டும். நடைமுறையில் உள்ள சட்டங்களால் இது சாத்தியமில்லை. இதனால்தான் ஊழலை ஒழிக்க வலுவான புதிய லோக்பால் சட்டம் தேவை என்று கூறுகிறேன். மக்களின் விருப்பமும் இதுதான். 

நேர்மையாக இருந்தால் எங்கள் கோரிக்கையை ஏற்பதில், வலுவான லோக்பால் சட்டத்தை இயற்றுவதில் ஆட்சியாளர்களுக்கு ஏன் தயக்கம்? நாட்டின் கருவூலங்களில் உள்ள நிதிக்கு திருடர்களால் அச்சுறுத்தல் இல்லை. அந்த நிதியின் பாதுகாவலர்களாக யார் இருக்கிறார்களோ அவர்களால்தான் அச்சுறுத்தல். வேலியே பயிரை மேய்கிறது. அரசு நிதி மக்கள் நலனுக்காக முறையாகச் செலவிடப்படுகிறது. கருவூலங்களில் பாதுகாப்பாக இருக்கிறது என்றால் நாங்கள் ஏன் வீதிக்கு வந்துப் போராட வேண்டும்? அதற்கான அவசியமே இருக்காதே.

 

தேர்தல் சீர்திருத்தம்… நாட்டு மக்கள் எத்தனையோ இன்னல்களைச் சந்தித்து வருகின்றனர். தங்களுக்காகக் குரல் கொடுக்க நேர்மையானவர்களைத் தேர்ந்தெடுத்து நாடாளுமன்றத்துக்கும், பேரவைகளுக்கும் அனுப்ப முடியாத சூழலில் மக்கள் உள்ளனர். இதற்கு நடைமுறையில் உள்ள தேர்தல் முறையே முழுக்காரணம் என்று சொல்லுவேன். இதனால் தேர்தல் சீர்திருத்தத்தைக் கொண்டு வருவது அவசியம். விவசாயிகளின் நிலை… விவசாயிகளின் வாழ்க்கை நிலையைப் பார்க்கும்போதும் பரிதாபமாகவுள்ளது. அவர்கள் வறுமையில் வாடுகின்றனர். இதை ஆட்சியாளர்கள் கண்டும் காணாமல் இருப்பது கண்டிக்கத்தக்கது.

இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைப்பது அவசியம். எனவே தேர்தல் சீர்திருத்தத்துக்காகவும், விவசாயிகளின் உரிமையை நிலைநாட்டவும் நான் தொடர்ந்து போராடுவேன்.

இப்போது நடைமுறையில் உள்ள நிலம் கையகப்படுத்தும் சட்டம் விவசாயிகளின் நலனுக்கு முற்றிலும் விரோதமாகவுள்ளது. அரசு நினைத்தால் எந்த விவசாய நிலத்தையும் கைப்பற்றி தனியாருக்கு கொடுத்துவிடலாம். இதனால் விவசாயிகள் கடும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர்.

 

எனவே விவசாய நிலத்தைக் கையகப்படுத்த புதிய சட்டத்தைக் கொண்டுவர வேண்டும். அவ்வாறு கொண்டுவரப்படும் சட்டம் விவசாயிகளின் பாதுகாவலனாக இருக்க வேண்டும். விவசாய நிலத்தைக் கையகப்படுத்துவதற்கு முன்னதாக கிராம சபைகளிடம் அனுமதி பெறுவதை உறுதி செய்ய வேண்டும். உண்மையான சுதந்திரமில்லை… நாடு சுதந்திரம் அடைந்து 64 ஆண்டுகள் ஆகிவிட்டபோதும் உண்மையான சுதந்திரக் காற்றை மக்களால் இன்னும் சுவாசிக்க முடியவில்லை.

வெள்ளையர்கள் ஆட்சிக்காலத்தில் அரங்கேறிய அதே கொள்ளை, ஊழல், அராஜகம் இப்போதும் தொடர்கிறது. சுதந்திர இந்தியாவில் எவ்வித மாற்றமும் நிகழ்ந்திடவில்லை.

 

நான் லேசான சோர்வையே உணர்கிறேன். எனக்கு ஆதரவாக நாடு முழுவதும் ஏற்பட்டிருக்கும் மக்கள் எழுச்சியைப் பார்க்கும் அந்த சோர்வும் மின்னல் வேகத்தில் மறைந்துவிடுகிறது. உடல்நிலையைக் கருத்தில் கொண்டு எவ்விதத்திலும் உண்ணாவிரதத்தைப் பாதியிலேயே கைவிடமாட்டேன். வலுவான லோக்பால் என்ற லட்சியத்தை அடையும்வரை உண்ணாவிரதத்தைத் தொடருவேன் என்றார் ஹசாரே.

மனம் இருந்தால்… இதைத்தொடர்ந்து மூத்த வழக்குரைஞர் சாந்தி பூஷண் கூறுகையில், வலுவான லோக்பால் சட்டத்தை இயற்ற வேண்டும் என்று அரசு உண்மையிலேயே விரும்பினால் அதை ஓரிரு நாள்களில் buy Lasix online செய்துவிட முடியும் என்றார்.

 

ஜனலோக்பாலை நிறைவேற்ற வேண்டும் என்ற காந்தியவாதி ஹசாரேவின் கோரிக்கைக்கு மத்திய அரசு மதிப்பளிக்க வேண்டும். அவரது கோரிக்கைக்கு மதிப்பளிப்பதென்பது நாட்டு மக்களின் உணர்வுக்கு மதிப்பளிப்பதாகும். ஜனலோக்பால் மசோதாவில் சிறிய மாற்றங்களை செய்வதற்குக்கூட நாங்கள் தயாராகவுள்ளோம் என்றும் சாந்தி பூஷண் கூறினார். 

Add Comment