துபாயில் வான‌லை வ‌ள‌ர்த‌மிழ் அமைப்பின் சார்பில் ந‌ட்பின் வ‌லிமை க‌விதைச் சிற‌ப்பித‌ழ் வெளியீடு

துபாய் : துபாய் வான‌லை வ‌ள‌ர்த‌மிழ் அமைப்பின் சார்பில் த‌மிழ்த்தேர் இத‌ழின் ‘ந‌ட்பின் வ‌லிமை’ க‌விதைச் சிற‌ப்பித‌ழ் வெளியீட்டு விழா 18.06.2010 வெள்ளிக்கிழ‌மை காலை க‌ராமா சிவஸ்டார் ப‌வ‌ன் உண‌வ‌க‌த்தில் ந‌டைபெற்ற‌து.

‘ந‌ட்பின் வ‌லிமை’ க‌விதைச் சிற‌ப்பித‌ழ் வெளியீட்டு விழாவிற்கு வான‌லை வ‌ள‌ர்த‌மிழ் அமைப்பின் த‌லைவ‌ர் ல. கோவிந்த‌ராசு த‌லைமை வ‌கித்தார். துவ‌க்க‌மாக‌ த‌மிழ்த்தாய் வாழ்த்தினை நிவேதிதா ஆன‌ந்த‌ன் நிக‌ழ்த்தினார். சிற‌ப்பு விருந்தினர்க‌ள் இஸ்லாமிய‌ இல‌க்கிய‌ க‌ழ‌க‌ பொதுச்செய‌லாள‌ர் எஸ்.எம். இதாய‌த்துல்லா குறித்த‌ அறிமுக‌த்தை முதுவை ஹிதாய‌த்தும், சி.த‌. க‌ல்வி அற‌க்க‌ட்ட‌ளை நிறுவ‌ன‌ர் செய்ய‌து எம். அப்துல் காத‌ர் குறித்த‌ அறிமுக‌த்தை கலைய‌ன்ப‌னும் நிக‌ழ்த்தின‌ர்.

சிற‌ப்பு விருந்தின‌ர்க‌ளுக்கு கீழை ராஜா, இர‌ஜ‌கைநில‌வ‌ன் ஆகியோர் பொன்னாடை அணிவித்து கௌர‌வித்த‌ன‌ர். வான‌லை வ‌ள‌ர்த‌மிழ் அமைப்பின் த‌லைவ‌ர் ல‌. கோவிந்த‌ராசு அவ‌ர்க‌ளின் த‌மிழ்ச் சேவையினைப் பாராட்டி இஸ்லாமிய‌ இல‌க்கிய‌க் க‌ழ‌க‌ பொதுச்செய‌லாள‌ர் எஸ்.எம். இதாய‌த்துல்லா பொன்னாடை அணிவித்து கௌர‌வித்தார். ‘ந‌ட்பின் வ‌லிமை’ க‌விதைச் சிற‌ப்பித‌ழை எஸ்.எம். இதாய‌த்துல்லா வெளியிட்டார். இர‌ஜ‌கை நில‌வ‌ன் த‌ன‌து க‌விதை நூலை சிற‌ப்பு விருந்தின‌ர்க‌ளுக்கு வ‌ழ‌ங்கினார்.

இஸ்லாமிய‌ இல‌க்கிய‌ க‌ழ‌க‌ பொதுச்செய‌லாள‌ர் எஸ்.எம். இதாய‌த்துல்லா அவ‌ர்க‌ள் த‌ன‌து உரையில் வ‌ருடம் ஒருமுறை சுற்றுலாவாக‌ குடும்ப‌த்தின‌ருட‌ன் வெளிநாடுக‌ளுக்கு சென்று வ‌ருவதாக‌வும், இவ்வாண்டு மொரிஷீய‌ஸ் சென்று வ‌ந்த‌தைக் குறிப்பிட்டார். அங்கு த‌மிழ‌ர்க‌ள் இருக்கின்ற‌ன‌ர். அழ‌கிய‌ த‌மிழ்ப் பெய‌ர்க‌ள் இருக்கின்ற‌ன‌. ஆனால் த‌மிழ் இல்லை. இந்நிலை மாற‌ வேண்டும். பிஜி, ம‌லேசியா போன்று அமீர‌க‌த்திலும் த‌மிழ‌ர்க‌ள் இதுபோன்ற‌ த‌மிழ்ப்ப‌ணி ஆற்றுவ‌து பாராட்டுக்குரிய‌து. அமீரக‌த்தில் தொழில்துறையில் த‌மிழ‌ர்க‌ளின் ப‌ங்கு இன்னும் தேவை. த‌மிழ‌ன் வாழ்ந்தால் த‌மிழ் வாழும். இஸ்லாமிய‌ப் புல‌வ‌ர்க‌ள் த‌மிழுக்கு ஆற்றிய‌ ப‌ணிக‌ளை நினைவு கூர்ந்தார். மிக‌வும் தொன்மையான‌ மொழியாகிய‌ த‌மிழ் மொழியின் வ‌ள‌ர்ச்சிக்கு ச‌ம‌ய‌ங்க‌ள் குறிப்பாக‌ வைண‌வ‌ம்,சைவ‌ம், இஸ்லாம் உள்ளிட்ட‌வை ஆற்றிய‌ ப‌ணிக‌ள் குறிப்பிட‌த்தக்க‌ன‌. இத்த‌கைய‌ சிற‌ப்பு மிக்க‌ த‌மிழ் மொழிக்கு செம்மொழி மாநாட்டினை த‌மிழ‌க‌ முத‌ல்வ‌ர் கோவையில் ஏற்பாடு செய்துள்ள‌ மாநாட்டில் அமீர‌க‌த் த‌மிழர்க‌ளும் ப‌ங்கேற்று சிற‌ப்புச் சேர்க்க‌ வேண்டும் என்றார்.

சி.த‌.க‌ல்வி அற‌க்க‌ட்ட‌ளை நிறுவ‌ன‌ர் செய்ய‌து எம். அப்துல் காத‌ர் அவ‌ர்க‌ள் த‌ன‌து உரையில் க‌விஞ‌ர்க‌ளுக்கு முத‌ன் முத‌லில் பொன்னாடை அணிவித்து கௌரவித்தவ‌ர் ந‌பிக‌ள் நாய‌க‌ம் ( ஸ‌ல் ) அவ‌ர்க‌ள் என்றார். திருக்குர்ஆனின் வ‌ச‌ன‌ங்க‌ளிலிருந்து க‌விவ‌ரிக‌ளை விவ‌ரித்தார். அமீர‌க‌த்தில் தொழில் துவ‌ங்க‌வ‌ரும் த‌மிழ‌ர்க‌ளுக்கு தாம் உத‌விட‌ த‌யாராய் இருப்ப‌தாக‌ குறிப்பிட்டார்.

ந‌ட்பின் வ‌லிமை குறித்த‌ க‌விய‌ர‌ங்க‌த்தை ஜியாவத்தீன், ச‌ந்திர‌சேக‌ர் ஆகியோர் ந‌டுவ‌ராக‌ இருந்து ந‌ட‌த்தின‌ர். க‌விஞ‌ர்க‌ள் ஆதி ப‌ழ‌னி, க‌ந்த‌நாத‌ன், க‌லைய‌ன்ப‌ன், ச‌ந்திர‌சேக‌ர், ஜெயா ப‌ழ‌னி, Doxycycline online இர‌ஜ‌கை நில‌வ‌ன், ஓக‌ளூர் நில‌வ‌ன், கிழை ராஜா உள்ளிட்ட‌ ப‌ல‌ர் க‌விதை பாடின‌ர். சிற‌ந்த‌ க‌விஞ‌ர்க‌ள் தேர்வும் ந‌டைபெற்ற‌து.

Add Comment