கள்ளநோட்டு விவகாரம் கடையநல்லூரை சேர்ந்த உதுமான் மைதீனுக்கு போலீஸ் வலை வீச்சு…

சங்கரன்கோவில் லட்சுமியாபுரம் 4ம் தெருவை சேர்ந்தவர் வேலாயுதம் மகன் சங்கரசுப்பிரமணியன் (41). விசைத்தறி உரிமையாளர். இவர் நேற்று முன் தினம் பாரத ஸ்டேட் வங்கியில் தனது மனைவி பகவதி பெயரில் உள்ள வங்கி கணக்கில் ரூ.80 ஆயிரம் செலுத்தினர். இதில் ஆயிரம் ரூபாய் நோட்டுகள் 57ம், 500 ரூபாய் நோட்டுகள் 46ம் கொடுத்தார். வங்கி பணியாளர் பணத்தை சரி பார்த்த போது அதில் 500 ரூபாய் நோட்களில் 43 எண்ணம் கள்ள நோட்டு இருப்பதை கண்டு பிடித்தார்.
இதுகுறித்து வங்கியின் மேலாளர் கருணாகரன் அளித்த புகாரின்பேரில் நகர காவல் இன்ஸ்பெக்டர் ராபின்சன், சப்&இன்ஸ்பெக்டர்கள் பால்துரை, சாமுவேல்குணசேகரன், சிறப்பு சப்&இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன், குற்றப்பிரிவு சிறப்பு சப்&இன்ஸ்பெக்டர் மணி மற்றும் போலீசார் விசைத்தறி Amoxil online உரிமையாளர் சங்கரசுப்பிரமணியத்தை கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், �எங்கள் விசைத்தறி கூடத்தில் உற்பத்தி செய்யப்படும் கர்ச்சிப் துணிகளை எனது தந்தை வேலாயுதம், கடையநல்லூரை சேர்ந்த முகம்மது மகன் உதுமான் மைதீன் என்பவரிடம் விற்பனை செய்தார். அப்போது அவர் எங்களுக்கு ரூ.30 ஆயிரம் தந்தார். அந்த பணத்துடன் சேர்த்து ரூ.80 ஆயிரத்தை எனது மனைவி பகவதிக்கு தங்க சங்கிலி வாங்க வைத்திருந்தேன். தங்கத்தின் விலை அதிகமாக இருப்பதால் பணத்தை வங்கியில் செலுத்தலாம் என்று எண்ணினேன். இங்கு வந்தபோது தான் கள்ள நோட்டு இருப்பது தெரிய வந்தது� என்றார். இதனை தொடர்ந்து விசைத்தறி உரிமையாளர்கள் சங்கரசுப்பிரமணியன், வேலாயுதத்தை போலீசார் கைது செய்தனர். கடையநல்லூரை சேர்ந்த உதுமான் மைதீனை தேடி வருகின்றனர்.

Add Comment