திருப்பூர் தற்கொலை நகரமா:7 மாதத்தில் 357 பேர் தற்கொலை!

தொழில் நகரமாக கருதப்படும் திருப்பூர் மாநகரில் தற்கொலை சம்பவங்கள் கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நடப்பாண்டில் ஜூலை வரையிலான 7 மாதங்களில் 357 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இந்திய அளவில் தொழில் நகரங்களில் முக்கியமானது திருப்பூர் மாநகரம். ஆண்டுக்கு பல ஆயிரம் கோடிக்கு ஏற்றுமதி செய்து வரும் திருப்பூர், கடந்த 20 ஆண்டுகளில் வியக்கத்தகுந்த தொழில் வளர்ச்சியை எட்டியது.
இவற்றில் மட்டுமல்லாது அதிகளவிலான தற்கொலைகள் நிகழும் மாவட்டமாகவும் திருப்பூர் உள்ளது. ஆண்டுதோறும் தற்கொலைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கடந்த 2009ம் ஆண்டு மட்டும் திருப்பூர் மாவட்டத்தில் 542 பேர் தற்கொலை செய்துள்ளனர். 2010ல் இது மேலும் அதிகரித்து 570 பேர் தற்கொலை செய்து உயிரிழந்தனர். இதனால் பல்வேறு தரப்பினரும் அதிர்ச்சியடைந்தனர்.

நடப்பாண்டில் இதன் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது. கடந்த 7 மாதத்தில் மட்டும் தற்கொலை செய்து இறந்தவர்களின் எண்ணிக்கை 357. நடப்பாண்டில் மாதம் சராசரியாக 51 பேர் இறக்கின்றனர். இது கடந்தாண்டின் மாத சராசரியைவிட 7 அதிகம். கடந்தாண்டைவிட 12 சதவீத தற்கொலை நடப்பாண்டில் அதிகரித்துள்ளன.

இது காவல்துறை வெளியிடும் புள்ளிவிவரம் மட்டுமே. ஏராளமான தற்கொலை வழக்குகள் காவல்நிலையத்தில் பதிவாவதில்லை. அதை கணக்கெடுத்தால் இதன் எண்ணிக்கை 2 மடங்காகும் என கூறப்படுகிறது. தற்கொலைகள் அதிகரித்து வருவதை தடுக்க அரசு ஆக்கபூர்வ நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

இது தொடர்பாக மார்க்சிஸ்ட் மத்தியக்குழு உறுப்பினர் வாசுகி கூறுகையில், ��வந்தாரை வாழவைக்கும் நகரமாக விளங்கிய திருப்பூர், பொருளாதார நெருக்கடியின் காரணமாக தற்கொலை நகரமாக மாறி வருவது கவலை அளிப்பதாக உள்ளது. தற்கொலைகளை no prescription online pharmacy தடுக்க மாவட்ட நிர்வாகத்தால் ஏற்படுத்தப்பட்டுள்ள குழு முறையாக செயல்படவில்லை. தொழில் நெருக்கடியால் தற்கொலைகள் அதிகரித்து வரும் நிலையில், தொழிற்சங்கங்கள் தற்கொலை தடுப்பு குழுவில் இடம்பெறாமல் உள்ளது சரியானது அல்ல. தொழிற்சங்க நிர்வாகிகளை கூட்டி தற்கொலை தடுப்பு கமிட்டி அமைக்கப்பட வேண்டும்�� என்றார்.

ஆண்களே அதிகம்

திருப்பூர் மாவட்டத்தில் தற்கொலை செய்து கொள்பவர்களில் 61 சதவீதம் பேர் ஆண்கள். கடந்த 2009ம் ஆண்டில் தற்கொலை செய்து கொண்ட 542 பேரில் 315 பேரும், 2010ல் 570 பேரில் 348 பேரும், 2011ல்(ஜூலை 31 வரை) 357 பேரில் 216 பேரும் ஆண்கள். சராசரியாக தற்கொலை செய்பவர்களில் 61 சதவீதம் பேர் ஆண்கள். 33 சதவீதம் பேர் பெண்கள். 2 சதவீதம் பேர் சிறுவர்கள். 4 சதவீதம் பேர் சிறுமியர்கள். தற்கொலை செய்பவர்களில் பெரும்பாலானோர் இளைஞர்கள். கிட்டத்தட்ட 45 சதவீதம் பேர் 30 வயதுக்குட்பட்டவர்கள் என்பது காவல்துறையின் புள்ளிவிவரம் ஆகும்.

Add Comment