செர்பியா அபார வெற்றி-ஜெர்மனிக்கு அதிர்ச்சித் தோல்வி

முதல் போட்டியில் ஆஸ்திரேலியாவை ஆணித்தரமாக வென்ற ஜெர்மனி, இன்றைய போட்டியில் செர்பியாவிடம் மோசமான தோல்வியைத் தழுவியது.

முரட்டு ஆட்டத்தில் ஈடுபட்டதற்காக ஜெர்மனியின் சூப்பர் ஸ்டார் மிரஸ்லோவ் குளோஸ் ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றப்பட்டது அந்த அணிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தி விட்டது.

போர்ட் எலிசபெத்தில் நடைபெற்ற இந்தப் போட்டி செர்பியாவுக்கு மிக முக்கியமானதாக இருந்தது. முதல் போட்டியில் கானாவிடம் 0-1 என்ற கோல் கணக்கில் செர்பியா தோல்வியைத் தழுவியிருந்தது. எனவே இதில் வென்றால் மட்டுமே காலிறுதிக்கு முந்தைய சுற்று குறித்து நினைத்துப் பார்க்க முடியும் என்ற நிலை.

அதேசமயம், எந்தவித பிசிறும் இல்லாத ஒரே அணியாக தற்சமயம் காணப்படும் ஜெர்மனி கடந்த போட்டியில் ஆஸ்திரேலியாவை ஒரு கோல் கூட போட விடாமல் தான் நான்கு கோல்கள் போட்டு அட்டகாசமாக buy Bactrim online வென்ற தெம்புடன் செர்பியாவை சந்தித்தது.

ஆனால் போட்டி தொடங்கியதுமே இரு அணிகளும் முரட்டு ஆட்டத்தில் இறங்கின. இதனால் இரு அணிகளுக்கும் சரமாரியாக மஞ்சள் கார்டு காட்டப்பட்டது. ஆனால் ஜெர்மனிக்கு பெரும் அதிர்ச்சி தரும் விதமாக சூப்பர் ஸ்டார் குளோஸுக்கு ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றினார் நடுவர்.

ஆட்டத்தின் 12வது நிமிடத்தில் முதல் மஞ்சள் கார்டை வாங்கினார் குளோஸ். அடுத்து, 37வது நிமிடத்தில் மீண்டும் மஞ்சள் கார்டு காட்ப்பட்டதால் ரெட் கார்டு கொடுத்து அவரை வெளியேற்றினார் நடுவர்.

இதனால் அதிர்ச்சியில் மூழ்கிய ஜெர்மனிக்கு அடுத்த நிமிடமே மேலும் ஒரு அதிர்ச்சியாக செர்பியா அபாரமான ஒரு கோலடித்தது. கிராசிக் அடித்த பந்தை தலையால் முட்டி வாங்கி நிறுத்திய ஜிஜிக் அதை ஜோவனோவிக்கிடம் தள்ளி விட்டார். அதை வாங்கிய ஜோவனோவிக் ஜெர்மானியர்களின் குழப்பத்தை சரியாக பயன்படுத்திக் கொண்டு கோலாக்கி செர்பியாவை குஷியில் ஆழ்த்தினார்.

முதல் பாதியில் ஏற்பட்ட அதிர்ச்சியிலிருந்து மீளாமலேயே ஜெர்மனி தனது ஆட்டத்தை 2வது பாதியில் தொடர்ந்தது. ஆனால் இந்த முறை செர்பியா தடுப்பாட்டத்தில் குதித்தது. இதனால் ஜெர்மனியின் கோல் முயற்சிகள் பலிக்கவில்லை. இறுதி வரை ஒரு கோல் கூட அடிக்க முடியாமல் ஆட்ட முடிவில் படு தோல்வியைச் சந்தித்தது ஜெர்மனி.

செர்பியாவிடம் தோல்வியைச் சந்தித்துள்ள ஜெர்மனியால், அதன் ரசிகர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இனி காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு ஜெர்மனி தகுதி பெற வேண்டுமானால் தனது கடைசி சுற்றுப் போட்டியில் அது கண்டிப்பாக வென்றாக வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

Add Comment