28 வயதில் புரட்சி மூலம் பிடித்த ஆட்சியை 69 வயதில் இழந்தார்!

Buy cheap Bactrim alt=”” width=”150″ height=”150″ align=”left” border=”0″ />ராணுவத்தில் வீரராக இருந்த கடாபி, 1965ல் பெங்காசி ராணுவ பல்கலைக்கழக அகாடமிக்கு வந்தார். அங்கிருந்து 1966ல் பிரிட்டன் ராயல் மிலிடரி பயிற்சிக்கு சென்றார். மீண்டும் படைக்கு திரும்பிய அவர், தனது ஆதரவாளர்களை திரட்டினார். துருக்கியில் சிகிச்சைக்கு லிபிய மன்னர் இட்ரிஸ் போயிருந்தபோது புரட்சி மூலம் 1969ல் ஆட்சியை கவிழ்த்தார் கடாபி.
லிபிய அரபு குடியரசு என்று அறிவித்தார். முப்படை தளபதியாகவும், ஆளும் கவுன்சில் தலைவராகவும் ஆனார். 1970 , 72 பிரதமராகவும், ராணுவ அமைச்சராகவும் இருந்தார். 1979ல் ஆட்சியாளரானார். 1911 , 1951 வரை இத்தாலியை ஆட்சி செய்த லிபியாவின் மன்னராட்சி முறையை ஒழிப்பதாக கூறியவர், தொடர்ந்து அதிபராக தானே நீடித்தார். ஏழைகளுக்கு அடிப்படை வாழ்க்கை வசதிகளை அளிப்பதாக கூறிய அவரது குடும்பம் கடந்த 42 ஆண்டுகளில் ஏராளமான சொத்து சேர்த்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. பிப்ரவரியில் புரட்சி படை தோன்றி கிளர்ச்சி தொடங்கியது. அதனால் 28 வயதில் புரட்சி மூலம் ஆட்சியை பிடித்த கடாபி அதே புரட்சிக்கு 69 வயதில் ஆட்சியை ஞாயிறன்று இழந்தார்.

Add Comment