நிமிடத்திற்கு நிமிடம் கொள்கை மாறுபவர்கள் – கம்யூனிஸ்டு – பா.ம.க. பற்றி ஜெயலலிதா

பாமக மற்றும் கம்யூனிஸ்டுகளின் கொள்கை நிமிடத்துக்கு நிமிடம் மாறுகிறது. சமச்சீர் கல்வியை அமல்படுத்த போராட்டம் நடத்தியவர்கள் இப்போது குறை கூறுவதா? என்று முதல்வர் ஜெயலலிதா கண்டனம் தெரிவித்துள்ளார்.

இன்று சட்டசபையில் பள்ளி கல்வி மற்றும் Buy cheap Lasix உயர்கல்வி துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் கலந்து கொண்டு பா.ம.க. உறுப்பினர் குரு பேசும் போது சமச்சீர் கல்வியை செயல்படுத்துவதில் உள்ள குறைபாடுகளை சரி செய்ய வேண்டும் என்று கூறினார்.

இதற்கு பதில் அளித்து முதல்வர் ஜெயலலிதா கூறியதாவது:

இவர்கள் கொள்கை நிமிடத்துக்கு நிமிடம் மாறுகிறது. சமச்சீர் கல்வியை உடனே செயல்படுத்தினால் அது அரைவேக்காடு தனமாக இருக்கும். அதை சீர் படுத்தி அடுத்த ஆண்டு நடை முறைப்படுத்துகிறோம் என்று தான் நாங்கள் கூறி னோம்.

ஆனால் கம்யூனிஸ்டு, பா.ம.க. மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் சமச்சீர் கல்வியை இப்போது இருக்கும் நிலையிலேயே அமல்படுத்த வேண்டும் என்று கூறினார்கள். நீதி மன்றமும் உத்தரவிட்டது,. நாங்கள் அமல்படுத்தி விட்டோம். இப்போது அதுபற்றி குறை சொன்னால் என்ன செய்வது.

சமச்சீர் கல்விக்காக கடந்த ஆட்சியில் ரூ.200 கோடி செலவு செய்து புத்தகம் அச்சடித்து விட்டார்கள். அதை வினியோகிக்க வேண்டும் என்று மற்ற கட்சி தலைவர்கள் வற்புறுத்தினார்கள். உச்ச நீதிமன்றம் அதை வினியோகிக்கும்படி தீர்ப்பு வழங்கியது. அந்த பாட புத்தகத்தில் பெருந்தலைவர் காமராஜர் பிறந்த தேதி, லால்பகதூர் சாஸ்திரி இறந்த தேதி தவறாக இருக்கிறது என்று பத்திரிகைகளிலேயே கட்டம் போட்டு செய்தி வெளியிட்டு இருக்கிறார்கள். இந்த பாட புத்தகமே இப்படி இருந்தால் மாணவர்கள் எப்படி தேறப் போகிறார்கள் என்று எனக்கு கவலையாக இருக்கிறது.

இவ்வாறு ஜெயலலிதா கூறினார்.

Add Comment