மக்களுக்கு வழங்க வைத்திருந்த இலவச காஸ் அடுப்புகளை அதிகாரிகள் மினி லாரியில் ஏற்றிச்சென்றனர்

விழுப்புரம் : இலவச காஸ் அடுப்புகள் ஏற்றப்பட்ட மினி லாரியை வழிமறித்து கிராம மக்கள் Buy Lasix முற்றுகையிட்டனர். கடந்த திமுக அரசால் இலவச காஸ் அடுப்பு வழங்கும் திட்டம் கொண்டு வரப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ் காஸ் அடுப்பு வழங்க விழுப்புரம் அருகே உள்ள சாலைஅகரம் கிராமத்தில் பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டனர். இதற்காக டோக்கன் வழங்கப்பட்டது. 361 காஸ் அடுப்புகள் வரவழைக்கப்பட்டு, சாலைஅகரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் வைக்கப்பட்டது.

பயனாளிகளுக்கு வழங்குவதற்குள் சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது. தேர்தல் முடிந்த பிறகு வழங்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்தனர். ஆனால் வழங்கப்படவில்லை. காஸ் அடுப்பு வழங்கக்கோரி ஊராட்சி தலைவரை கிராம மக்கள் வலியுறுத்தினர். பள்ளியில் வைக்கப்பட்டிருந்த காஸ் அடுப்புகளை எடுத்து ஊராட்சி தலைவியின் கணவர் பெருமாள் நேற்று முன்தினம் மதியம் வினியோகம் செய்துள்ளார்.

இதையறிந்து விழுப்புரம் குடிமை பொருள் தாசில்தார் சேகர் தலைமையிலான குழு விரைந்து சென்று, அரசிடம் இருந்து உத்தரவு வராத நிலையில் காஸ் அடுப்பு வழங்கக்கூடாது என்று கூறி தடுத்தனர். குடிமை பொருள் தாசில்தார் கொடுத்த புகாரின் பேரில் ஊராட்சி மன்ற தலைவியின் கணவர் பெருமாள், எழுத்தர் விநாயகம் ஆகியோர் மீது வளவனூர் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

இதைதொடர்ந்து, பள்ளியில் மீதமிருந்த 155 காஸ் அடுப்புகளை மினிலாரியில் ஏற்றிக்கொண்டு குடிமைபொருள் தாசில்தார் சேகர் புறப்பட முயன்றார். இதையறிந்து மினிலாரியை காஸ் அடுப்பு பெறாத மக்கள் வழிமறித்து முற்றுகையிட்டனர். இலவச காஸ் அடுப்புகளை எங்களுக்கு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினர். தாசில்தார் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் உடன்பாடு ஏற்படவில்லை. போலீஸ் உதவியோடு காஸ் அடுப்புகள் இருந்த மினிலாரி மீட்கப்பட்டு, விழுப்புரம் சேமிப்பு கிடங்குக்கு கொண்டு செல்லப்பட்டது.

Add Comment