கடையநல்லூரில் சத்துணவு ஊழியர் சங்க கூட்டம்

கடையநல்லூரில் சத்துணவு ஊழியர் சங்க கூட்டம் நடந்தது. தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் கடையநல்லூர் கிளை ஒன்றிய செயற்குழு கூட்டம் ஒன்றிய தலைவர் வேலுச்சாமி தலைமையில் நடந்தது. மாவட்ட தலைவர் முருகன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் சங்க நிர்வாகிகள் சேதுராமலிங்கம், திரிபுரநாராயணன், முத்துசாமி, பத்மநாபன், முருகன், ஹமீதாள், மாரியப்பன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் வரும் 30ம் தேதி நெல்லையில் நடைபெறும் அடக்குமுறை எதிர்ப்பு தின கூட்டத்தில் கடையநல்லூர் ஒன்றியம் சார்பில் அதிகமான ஊழியர்கள் கலந்து கொள்வது, வரும் 3ம் தேதியன்று சத்துணவு ஊழியர்களின் கோரிக்கைகளை தமிழக முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்ல சென்னையில் நடைபெறும் கோரிக்கை மாநாட்டில் நிர்வாக குழு ஊழியர்கள் கலந்து கொள்ளவும், 20 ஆண்டிற்கு மேல் பணிபுரிந்து வரும் சத்துணவு அமைப்பாளர்களுக்கு வழங்க வேண்டிய ஊக்க ஊதியத்தை உடனடியாக Lasix online வழங்கிடவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Add Comment