அடுத்த சுற்றுக்கு முன்னேறுவது யார்: இன்று நெதர்லாந்து-ஜப்பான் மோதல்

உலக கோப்பை லீக் போட்டியில் இன்று நெதர்லாந்து, ஜப்பான் அணிகள் தங்களது இரண்டாவது போட்டியில் மோதுகின்றன. இதில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு செல்வது யார் என்பது குறித்து பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தென் ஆப்ரிக்காவில் 19வது உலக கோப்பை தொடர் நடக்கிறது. இதில் பங்கேற்கும் 32 அணிகள், எட்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. இன்று “இ’ பிரிவில் நடக்கும் இரண்டாவது சுற்று லீக் போட்டியில் நெதர்லாந்து, ஜப்பான் அணிகள் மோதுகின்றன.
நெதர்லாந்து அணியை பொறுத்தவரையில், டென்மார்கிற்கு எதிரான தனது முதல் போட்டியில் ö வற்றி பெற்றிருந்தது. இந்த ஆட்டத்தில் நெதர்லாந்து வீரர்கள் விறுவிறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினாலும், “பிரி கிக்’ மற்றும் “கார்னர் கிக்’ வாய்ப்புகளை கோலாக மாற்றத் திணறுவது பெரும் பலவீனமாக உள்ளது.
இருப்பினும் டென்மார்க்கிற்கு எதிரான முதல் போட்டியில் கோல் அடித்த குயிட், இன்றும் அசத்த முயற்சிக்கலாம். தொடர்ந்து அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தும் வெஸ்லே ஸ்னெஜ்டர் அனுபவம் வாய்ந்த கேப்டன் ஜியோவனி வான் ஆகியோரும் சாதிக்கலாம். தவிர, தற்காப்பு பகுதியில் அசத்தலாக செயல்பட்ட ஜோரிஸ், வான் டர் வியல், ஹெட்டிங்கா மற்றும் புரோன்க்ஹர்ஸ்ட், முன்கள ஆட்டக்காரர்கள் ராபின் வான் பெரிஸ், ரேயான் பேபல் அணியின் வெற்றிக்கு உதவலாம்.
போட்டி குறித்து அணியின் பயிற்சியாளர் பெர்ட் வான் மர்வ்ஜிக் கூறுகையில்,”” உலக கோப்பை தொடருக்கு முன், முதல் போட்டியை குறித்து தான் அதிகம் நினைத்துக்கொண்டு இருந்தேன். ஏனெனில் உலக கோப்பை தொடரை சிறப்பாக துவக்குவது முக்கியம். இதற்கேற்ப எங்கள் வீரர்கள் முதல் போட்டியில் வென்றனர். இது மிகுந்த உற்சாகத்தை தந்தது. இன்று இதே ஆட்டத்தை, ஜப்பானுக்கு எதிராகவும் தொடரவுள்ளோம்,” என்றார்.
ஜப்பான் அசத்தல்:
நான்காவது முறையாக உலக கோப்பை தொடரில் விளையாடும், ஆசிய அணியான ஜப்பான் அணி, பெரும்பாலும் அதிகம் வெற்றி பெறுவதில்லை. ஆனால் காமரூனுக்கு எதிரான கடந்த போட்டியில் இந்த வீரர்கள் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி மிரட்டினர். இந்த அணியின் தற்காப்பு வீரர்கள் யூச்சி கோமனோ, யூடோ நகடோமா மற்றும் நடுகள வீரர் யசுகிடோ ஆகியோர் நூறு சதவீத திறமை வெளிப்படுத்தினர்.
ஆனால் யூகி அபே, மக்கடோ ஹசபே, டாய்சுகே மட்சுய் போன்றவர்கள் நடுகளத்தில் பந்தை கடத்துவதில் திணறலான ஆட்டத்தை வெளிப்படுத்து கின்றனர். இன்று சாதிக்க முயற்சித்தால் நல்லது. முன்கள வீரர் கிசோ யானோ, எதிரணி கோல் ஏரியா பகுதியில், சக வீரர்களுக்கு சரியாக பந்தை “பாஸ்’ செய்யவேண்டும்.
இவர்கள் தவிர, கடந்த ஆட்டத்தில் கோல் அடித்த கெய்சுகே ஹோண்டா, இன்றும் அணிக்கு நம்பிக்கை தருவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்து ஹோண்டா கூறுகையில்,””முதல் போட்டியில் காமரூன் வீரர்களை எங்களால் தடுக்க முடியும் என்ற நிலையில், ஏன் வெற்றியும் பெறக்கூடாது என முயற்சித்தோம். ஏற்கனவே பயிற்சி போட்டிகளில் மோசமாக விளையாடியதால், கூடுதல் நம்பிக்கையுடன் செயல்பட்டு, வென்றோம். நான் அடித்த கோல், எனக்கு பிறந்த நாள் பரிசாக அமைந்தது. இன்றும் நெதர்லாந்தை வீழ்த்த முயற்சிப்போம்,” என்றார்.
யார் முந்துவது?
மொத்தத்தில் இரு அணிகளும் முதல் போட்டியில் வென்றுள்ளதால், இன்றைய போட்டியின் முடிவு மிக முக்கியமாகியுள்ளது. ஏனெனில் இன்று Buy Doxycycline வெல்லும் அணி, “ரவுண்டு-16′ செல்வது எளிது என்பதால், கடுமையான போராட்டத்தை எதிர்பார்க்கலாம்.
மலைக்கச் செய்வோம்
இன்று நெதர்லாந்து அணியில் மலைக்கும் வகையில் விளையாடுவோம் என, ஜப்பான் அணியின் நடுகள வீரர் யூகி அபி தெரிவித்துள்ளார். இதுகுறித்து இவர் கூறுகையில்,”” நெதர்லாந்தின் ஸ்னெஜ்டர், அனைத்து பகுதியிலும் சிறப்பாக விளையாடுகிறார். தவிர, மற்றும் சில அசத்தலான வீரர்கள் அங்கு <உள்ளனர். இவர்களை சமாளிப்பது எங்களுக்கு கடினம் தான். இதனால் எங்கள் தற்காப்பு வீரர்களைத் தான் பெரிதும் நம்பியுள்ளோம். இருப்பினும் நெதர்லாந்து வீரர்கள் மலைக்கும் வகையில் விளையாடுவோம் என்றார்.
இதுவரை…
இரு அணிகளும் இதுவரை ஒரு போட்டியில் மட்டும் மோதியுள்ளன. இதில் நெதர்லாந்து அணி வெற்றி பெற்றுள்ளது. இந்த போட்டியில் நெதர்லாந்து வீரர்கள் 3 கோல்கள் அடித்தனர். பதிலுக்கு ஜப்பான் அணி, ஒரு கோல் கூட அடிக்கவில்லை.

Add Comment