கடையநல்லூரில் குடிநீர் திட்ட பணிகள்

கடையநல்லூரில் குடிநீர் திட்ட பணிகள் விரைந்து முடிக்க நடவடிக்கை : அமைச்சர் செந்தூர்பாண்டியன் தகவல்

கடையநல்லூர் நகராட்சி பகுதியில் செயல்படுத்தப்படும் குடிநீர் புனரமைப்பு திட்ட பணிகள் குறிப்பிட்ட காலத்திற்குள் முடிப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படுமென அமைச்சர் செந்தூர்பாண்டியன் தெரிவித்தார்.

இதுகுறித்து அமைச்சர் செந்தூர்பாண்டியன் கூறியதாவது: கடையநல்லூர் நகராட்சி பகுதி மக்களின் குடிநீர் தேவையின் தொலைநோக்கு பார்வையை கருத்தில் கொண்டு சுமார் 22 கோடி ரூபாய் செலவில் குடிநீர் திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நகராட்சி பகுதியில் அமைந்துள்ள இந்திராநகர், இக்பால்நகர், முத்துகிருஷ்ணாபுரம், கிருஷ்ணாபுரம், குமந்தாபுரம், மேலக்கடையநல்லூர், பேட்டை மலம்பாட்டை தெரு உள்ளிட்ட பகுதிகளில் பல லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட வாட்டர் டேங்குகள் அமைக்கப்படுகின்றன. புதிதாக இரண்டு கிணறுகள் இத்திட்டத்தின்படி உருவாக்கப்படுகிறது. இத்திட்டத்தினை பொறுத்தவரை பொதுமக்களின் கோடைகால குடிநீர் பிரச்னையை மையமாக கொண்டு செயல்படுத்தப்படுகிறது. திட்டத்தின் கால அவகாசத்திற்குள் இப்பணியை முடித்து தருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கடையநல்லூரில் செயல்பட்டு வரும் அரசு ஆஸ்பத்திரியில் நோயாளிகளின் நலனை கருத்தில் கொண்டு போதுமான டாக்டர்களை நியமிக்க வேண்டுமென சுகாதாரத்துறை அமைச்சரிடம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. காலியாக உள்ள டாக்டர்கள் பணியிடங்கள் நிரப்புவதற்காக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என்றார்.

அமைச்சருடன் மாவட்ட துணை செயலாளர் வி.பி.மூர்த்தி, buy Doxycycline online தொகுதி செயலாளர் மாரியப்பன், நகர செயலாளர் கிட்டுராஜா, ஒன்றிய செயலாளர் வசந்தம் முத்துப்பாண்டி, கவுன்சிலர் முருகன், வக்கீல்கள் அருள்ராஜ், அய்யப்பராஜா, யாத்ராபழனி, பஞ்.,தலைவர்கள் மூக்கையா, செல்லப்பா, உதவியாளர் செங்கோட்டை குருசாமி, மாவட்ட இளைஞர் பாசறை துணை செயலாளர் ராஜேஸ்வரன் உடனிருந்தனர்.

Add Comment