உலக கோப்பை கால்பந்து: “டிரா’ செய்தது அமெரிக்கா

உலக கோப்பை கால்பந்து தொடரில், அமெரிக்கா-சுலோவேனியா மோதிய லீக் போட்டி 2-2 என்ற கோல் கணக்கில் “டிரா’வில் முடிந்தது.
தென் ஆப்ரிக்காவில் 19வது உலக கோப்பை கால்பந்து தொடர் நடக்கிறது. நேற்று ஜோகனஸ்பர்க்கில் உள்ள எல்லிஸ் பார்க் மைதானத்தில் நடந்த “சி’ பிரிவு லீக் போட்டியில் அமெரிக்கா, சுலோவேனிய அணிகள் Buy Viagra மோதின.
சுலோவேனியா ஆதிக்கம்:
முதல் பாதியில் சுலோவேனியா அணி ஆதிக்கம் செலுத்தியது. ஆட்டத்தின் 13வது நிமிடத்தில் நட்சத்திர வீரர் பிர்சா சுமார் 30 மீட்டர் தூரத்தில் இருந்து பந்தை கோல் போஸ்டுக்குள் சூப்பராக அடிக்க, சுலோவேனியா முதல் கோல் அடித்தது. பின் 42வது நிமிடத்தில் லுஜுபிஜான்கிக் ஒரு கோல் அடிக்க, முதல் பாதி முடிவில் சுலோவேனியா 2-0 என வலுவான முன்னிலை பெற்றது.
அமெரிக்கா எழுச்சி:
இரண்டாவது பாதியில் அமெரிக்க அணி எழுச்சி கண்டது. 48வது நிமிடத்தில் இந்த அணியின் டொனோவன் ஒரு அருமையான கோல் அடித்தார். 62வது நிமிடத்தில் சுலோவேனிய வீரர் பிர்சா “பிரீகிக்’ வாய்ப்பை வீணாக்கினார். 82வது நிமிடத்தில் அமெரிக்காவின் மைக்கேல் பிராட்லி ஒரு கோல் அடிக்க, போட்டி 2-2 என “டிரா’ ஆனது. இரு அணிகளும் தலா ஒரு புள்ளி பெற்றன.

Add Comment