காயிதே மில்லத் திடலில் பெருநாள் தொழுகை நடத்த TNTJ விற்கு அனுமதி.

ஏக இறைவனின் திருப்பெயரால்…
கடையநல்லூர் காயிதே மில்லத் திடலில் பெருநாள் தொழுகை நடத்துவது யார் என்ற இஸ்லாமிய அமைப்புக்களுக்கிடையிலான பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக 23/08/2011 அன்று தென்காசி கோட்டாட்சியர் அலுவலகத்தில் சமாதானக் கூட்டம் நடைபெற்றது.

அதன் அடிப்படையில் “ சட்டம் ஒழுங்கை பராமரிக்கும் வகையிலும்,பெருநாள் தொழுகை அமைதியாக,சிறப்பாக நடைபெற வேண்டும் என்ற நோக்கிலும்,கடந்த ஆண்டுகளில் தொழுகை நடத்தி வந்த தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்திற்கு காலை 06:00 முதல் 07:00 மணி வரை முதலில் தொழுகை நடத்த அனுமதி வழங்கப்பட்டது…அல்லாஹு அக்பர்!!!அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்!!!

மேற்படி தொழுகைக்கான அனைத்து முன்னேற்பாடுகளையும் மக்தும் ஞானியார் தர்ஹா இனாம்தார் கமிட்டி செய்யவேண்டும் எனவும் அதற்கான பொருளாதாரத்தை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்(TNTJ) வழங்க வேண்டும் எனவும் அக்கூட்டத்தில் buy Amoxil online முடிவு செய்யப்பட்டது.

சத்தியம் வந்தது; அசத்தியம் அழிந்தது. நிச்சயமாக அசத்தியமானது அழிந்தே தீரும் (அல் குர்ஆன் 17:81)

Add Comment