இலங்கை அசத்தல் வெற்றி: வங்கதேசம் பரிதாபம்

வங்கதேச அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 126 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றது. இதன்மூலம் இலங்கை அணியின் பைனல் வாய்ப்பு கிட்டத்தட்ட உறுதியானது. தொடர்ந்து இரண்டு போட்டியில் தோல்வி கண்ட வங்கதேச அணி, பைனல் வாய்ப்பை இழந்தது.
இலங்கையில், ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் நடக்கிறது. தம்புலாவில் நேற்று நடந்த போட்டியில் “நடப்பு சாம்பியன்’ இலங்கை அணி, சாகிப் அல் ஹசன் தலைமையிலான வங்கதேச அணியை சந்தித்தது. “டாஸ்’ வென்ற இலங்கை அணி கேப்டன் சங்ககரா, பேட்டிங் தேர்வு செய்தார்.
சூப்பர் துவக்கம்:
முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணிக்கு உபுல் தரங்கா, தில்ஷன் ஜோடி சூப்பர் துவக்கம் கொடுத்தது. வங்கதேச பந்துவீச்சை பதம்பார்த்த தில்ஷன், ஒருநாள் கிரிக்கெட் அரங்கில் தனது 20வது அரைசதமடித்தார். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 111 ரன்கள் சேர்த்த போது தில்ஷன் (71) அவுட்டானார். பின்னர் கேப்டன் சங்ககராவுடன் இணைந்த உபுல் தரங்கா, ஒருநாள் அரங்கில் தனது 16வது அரைசதமடித்தார். இவர் 54 ரன்கள் எடுத்தபோது, மகமதுல்லா பந்தில் வெளியேறினார்.
சங்ககரா அரைசதம்:
பின்னர் மகிலா ஜெயவர்தனா, சங்ககரா ஜோடி அணியின் ரன்வேட்டை நடத்தியது. அபாரமாக ஆடிய சங்ககரா, ஒருநாள் அரங்கில் தனது 56வது அரைசதமடித்தார். இந்த ஜோடி 3வது விக்கெட்டுக்கு 69 ரன்கள் சேர்த்த போது சங்ககரா (52) அவுட்டானார். இவருக்கு ஒத்துழைப்பு தந்த ஜெயவர்தனா (43) அரைசத வாய்ப்பை இழந்தார். பின்னர் பொறுப்புடன் ஆடிய மாத்யூஸ் (42*), கபுகேதரா (37*) ஜோடி அணியின் ஸ்கோரை வலுவாக்கியது. இலங்கை அணி 50 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 312 ரன்கள் குவித்தது. வங்கதேசம் சார்பில் ஷபிபுல் இஸ்லாம் 2 விக்கெட் வீழ்த்தினார்.
இக்பால் அபாரம்:
கடின இலக்கை விரட்டிய வங்கதேச அணிக்கு தமிம் இக்பால் (51) சூப்பர் துவக்கம் கொடுத்தார். பின்னர் வந்த இம்ருல் கெய்ஸ் (3), அஷ்ரபுல் (9), முஷ்பிகுர் (6), மகமதுல்லா (9) உள்ளிட்ட முன்னணி வீரர்கள் ஏமாற்றம் அளித்தனர். சித்திக் (38), கேப்டன் சாகிப் அல் ஹசன் (20), நயீம் இஸ்லாம் (15), மொர்டசா (15) உள்ளிட்டோர் Levitra No Prescription ஓரளவு கைகொடுக்க, வங்கதேச அணி 40.2 ஓவரில் 186 ரன்களுக்கு ஆல்-அவுட்டாகி, 126 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. இதன்மூலம் வங்கதேச அணியின் பைனல் வாய்ப்பு முடிவுக்கு வந்தது. ஆட்டநாயகனாக ஆல்-ரவுண்டராக அசத்திய தில்ஷன் தட்டிச் சென்றார்.
போனஸ் புள்ளி:
வங்கதேச அணிக்கு 313 ரன்கள் என்ற கடின இலக்கை நிர்ணயித்த இலங்கை அணி, 40.2 ஓவரில் 186 ரன்களுக்கு சுருட்டியது. இதனால் கூடுதலாக ஒரு போனஸ் புள்ளி பெற்ற இலங்கை அணி, புள்ளிப்பட்டியலில் 9 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து, பைனல் வாய்ப்பை அதிகப்படுத்திக் கொண்டது. இரண்டாவது இடத்தில் இந்திய அணி 5 புள்ளிகளுடன் உள்ளது.

Add Comment