லோக்பால் மசோதா பற்றி விவாதிக்க டெல்லியில் இன்று சர்வ கட்சி கூட்டம்

புதுடெல்லி : லோக்பால் மசோதா பற்றி விவாதிக்க டெல்லியில் இன்று அனைத்து கட்சி கூட்டத்தை பிரதமர் மன்மோகன் சிங் கூட்டியுள்ளார். வலிமையான லோக்பால் மசோதா தாக்கல் செய்ய கோரி சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே, கடந்த 16ம் தேதி முதல் அவர் உண்ணாவிரதம் இருந்து வருகிறார். போராட்டம் தொடங்கி 7 நாள் முடிந்தும் ஹசாரே குழுவினரை பேச்சுவார்த்தைக்கு அழைக்காமல் மத்திய அரசு பிடிவாதமாக இருந்தது. இந்நிலையில், நாடாளுமன்றத்தில் இப்பிரச்னையை எதிர்க்கட்சிகள் நேற்று கிளப்பி அமளியில் ஈடுபட்டன.

இதைத் தொடர்ந்து, மூத்த அமைச்சர்கள் பிரணாப், ஏ.கே.அந்தோணி, buy Levitra online லோக்பால் மசோதாவை ஆய்வு செய்யும் நிலைக் குழு தலைவர் அபிஷேக் சிங்வி ஆகியோரிடம் பிரதமர் மன்மோகன்சிங் நேற்று காலை ஆலோசனை நடத்தினார். இதன்பின், லோக்பால் பிரச்னை பற்றி விவாதிக்க டெல்லியில் இன்று மாலை 3.30 மணிக்கு அனைத்து கட்சி கூட்டத்தை பிரதமர் மன்மோகன் சிங் கூட்டியுள்ளார். இதை நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் பவன்குமார் பன்சால் தெரிவித்தார்.

Add Comment