ஹசாரே உண்ணாவிரதம் – கூட்டம் குறைந்தது

புதுடெல்லி. ஆக. 24 – சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே உண்ணாவிரதம் இருக்கும் டெல்லி ராம் லீலா மைதானத்தில் கூட்டம் குறைந்து வருகிறது. அவரவர்கள் தங்களது சொந்த வேலைகளை பார்க்க திரும்பியதால் இந்த கூட்டம் குறைந்து Buy cheap Viagra வருகிறது என்று கூறப்படுகிறது.ஊழலுக்கு எதிராக வலுவான லோக்பால் சட்டத்தை கொண்டு வர வேண்டும் என்று கோரி நேற்று 8 வது நாளாக சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே உண்ணாவிரதம் இருந்து வருகிறார்.

இவரது உண்ணாவிரதத்திற்கு ஆதரவாக அதே ராம்லீலா மைதானத்தில் ஆரம்பத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் கூடி உண்ணாவிரதம் இருந்து வந்தனர்.

ஆனால் நேற்று கூட்டம் மிகவும் குறைவாக காணப்பட்டது. கடந்த நாட்களில் இருந்த கூட்டத்தை விட நேற்று குறைவான கூட்டம் காணப்பட்டதற்கு ஹசாரேவின் ஆதரவாளர்கள்  தங்களது சொந்த வேலைகளுக்கு திரும்பி விட்டதே காரணம் என்று கூறப்படுகிறது.

கடந்த சனி, ஞாயிறு கிழமைகள் வழக்கமான விடுமுறை தினங்கள் என்பதாலும் திங்கள் கிழமை ஜென்மாஷ்டமி விடுமுறை என்பதாலும் ராம் லீலா மைதானத்தில் கூட்டம் நிரம்பியிருந்தது. நேற்று செவ்வாய்க்கிழமை வேலை நாள் என்பதால் ஹசாரேவின் ஆதரவாளர்கள் தங்களது  வேலைகளுக்கு திரும்பி விட்டதால் கூட்டம் குறைந்து வருகிறது என்று ஹசாரே ஆதரவாளர் ஒருவர் கூறினார்.

வார விடுமுறை நாட்களில் இருந்த கூட்டம் நேற்று இல்லை என்றும் அவர் கூறினார்.

ஆரம்பத்தில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் கூடியிருந்தனர் என்றும் ஆனால் நேற்று வெறும் 6,000 பேர் மட்டுமே கூடியிருந்தனர் என்றும் அவர் தெரிவித்தார்.

மிகப்பெரிய கூட்டத்தை எதிர்பார்ப்பது நியாமல்ல என்று இன்னொரு ஆதரவாளர் கூறினார்.

பலருக்கும் பலவிதமான வேலைகள் இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

கூட்டம் குறைந்து வருவதால் ஹசாரேவுக்கு ஆதரவு குறைந்து விட்டதாக எண்ணுவது தவறு என்றும் அவர் கூறினார்.

இந்த  நிலையில் சட்டம் ஒழுங்கை  யாரும் கையில் எடுத்துக்கொள்ள வேண்டாம் என்றும் அமைதியான முறையில் போராட்டங்களை நடத்துமாறும் ஹசாரேவின் ஆதரவாளர் அர்விந்த் கெஜ்ரிவால் ஹசாரேவின் ஆதரவாளர்களை கேட்டுக்கொண்டார்

Add Comment