இன்று இந்தியா-பாக்., மோதல்: ஆசிய கோப்பையில் “விறுவிறு’

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் இன்றைய போட்டியில், பரம எதிரிகளான இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. சர்வதேச கிரிக்கெட் அரங்கில் சுமார் 8 மாதங்களுக்கு பின், இவ்விரு அணிகள் மோதுவதால், அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
இலங்கையில், ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் நடக்கிறது. தம்புலாவில் இன்று நடக்கும் போட்டியில், தோனி தலைமையிலான இந்திய அணி, அப்ரிதியின் பாகிஸ்தான் அணியை சந்திக்கிறது.
கட்டாய வெற்றி:
இலங்கை அணிக்கு எதிரான போட்டியில், பாகிஸ்தான் அணி தோல்வியடைந்தது. இதனால் பைனல் வாய்ப்பை தக்க வைத்துக் கொள்ள, இன்றைய போட்டியில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. வங்கதேச அணியை வீழ்த்திய இந்திய அணியின் வெற்றிநடை, இன்று தொடரும் பட்சத்தில் பைனலுக்கு சுலபமாக முன்னேறிவிடும்.
வலுவான பேட்டிங்:
இந்திய அணி, வலுவான பேட்டிங் வரிசை கொண்டிருப்பது சாதகமான விஷயம். இருப்பினும் வங்கதேச அணிக்கு எதிராக ஏமாற்றிய சேவக், இன்று அதிரடி துவக்கம் கொடுத்தால் நல்லது. கடந்த போட்டியில் 82 ரன்கள் விளாசிய காம்பிர் மற்றும் தோனி நல்ல “பார்மில்’ இருப்பது கூடுதல் பலம். விராத் கோஹ்லி, ரோகித் சர்மா தங்களது திறமையை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். சுரேஷ் ரெய்னா முன்வரிசையில் களமிறங்கும் பட்சத்தில், அணியின் ஸ்கோரை Buy Lasix Online No Prescription உயர்த்த வாய்ப்பு உள்ளது.
பலவீனமான வேகம்:
இந்திய அணியில் ஜாகிர், நெஹ்ரா, பிரவீண் குமார் உள்ளிட்ட சிறந்த வேகங்கள் இருந்தபோதும், வங்கதேச அணிக்கு எதிராக பெரிய அளவில் சோபிக்கவில்லை. இன்றைய போட்டியில் இவர்கள் எழுச்சி பெற வேண்டும. சுழலில் ஹர்பஜன் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். வங்கதேசத்துக்கு எதிராக நான்கு விக்கெட் வீழ்த்திய சேவக், மீண்டும் சாதிக்கலாம்.
அப்ரிதி நம்பிக்கை:
இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் சதம் அடித்த பாகிஸ்தான் கேப்டன் அப்ரிதி, இன்றும் போராடலாம். கடந்த போட்டியில் சல்மான் பட், சோயப் மாலிக், அப்துல் ரசாக் உள்ளிட்ட முன்னணி பேட்ஸ்மேன்கள் ஏமாற்றம் அளித்தது தோல்விக்கு காரணமாக அமைந்தது.
நீண்ட நாட்களுக்கு பின் களமிறங்கிய “வேகப்புயல்’ சோயப் அக்தர், இலங்கை அணிக்கு எதிரான சிறப்பாக செயல்பட்டார். இன்றைய போட்டியிலும் இவரது வேகம் கைகொடுக்கும் பட்சத்தில், இந்திய அணிக்கு சவால் கொடுக்கலாம். சுழலில் அப்ரிதி, மாலிக் நம்பிக்கை அளிப்பது சாதகமான விஷயம்.
இதுவரை இவ்விரு அணிகள்
ஆசிய கோப்பை கிரிக்கெட் அரங்கில், இந்தியா-பாகிஸ்தான் அணிகள் 8 போட்டியில் மோதின. இதில் பாகிஸ்தான் 4, இந்தியா 3 போட்டியில் வெற்றி பெற்றன. ஒரு போட்டிக்கு முடிவு இல்லை.
* ஆசிய கோப்பை அரங்கில் இந்திய அணி விளையாடிய, 33 போட்டியில் 20 வெற்றி, 12 தோல்வியை பெற்றது. ஒரு போட்டிக்கு முடிவு இல்லை. பாகிஸ்தான் அணி விளையாடிய 29 போட்டியில் 17 வெற்றி, 11 தோல்வியை பதிவு செய்தது. ஒரு போட்டிக்கு முடிவு இல்லை.
* சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில், இந்தியா-பாகிஸ்தான் அணிகள் இதுவரை 118 ஒருநாள் போட்டியில் மோதியுள்ளன. இதில் பாகிஸ்தான் 69, இந்தியா 45 போட்டியில் வெற்றி பெற்றன. நான்கு போட்டிகளுக்கு முடிவு இல்லை.
எட்டு மாதங்களுக்கு பின்
இன்றைய போட்டியின்மூலம், சர்வதேச கிரிக்கெட் அரங்கில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள், சுமார் 8 மாதங்களுக்கு பின் மோதுகின்றன. முன்னதாக கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம், தென் ஆப்ரிக்காவில் நடந்த சாம்பியன்ஸ் டிராபி (மினி உலக கோப்பை) தொடரில், செஞ்சுரியனில் நடந்த போட்டியில் மோதின. இதில் பாகிஸ்தான் அணி 54 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.*

Add Comment