வினாடிக்கு 2 பைசா பிச்சையெடுக்கும் தொழில் – Airtel அராஜகங்கள்!

வினாடிக்கு 2 பைசா பிச்சையெடுக்கும் தொழில் – Airtel அராஜகங்கள்!

‘Airtel நெட்வொர்க் ஐ தேர்ந்தெடுத்ததற்காக பெருமைப்படுகிறேன். அவ்வளவு சிறப்பான சேவை, நெட்வொர்க் கவரேஜ், சூப்பரான ஆபர்கள். ஆஹா! மக்கள் ஏன் மற்ற நெட்வொர்க் ஐ தேர்ந்தெடுக்க வேண்டும்?’ – இதெல்லாம் நான்கு வருடங்களுக்கு முன்பு….

இவங்களோட அராஜகத்துக்கு அளவே இல்லாம இருக்கு இப்போ!

அப்படி என்னதான் பண்ணறாங்க?

1 . கேவலமான கஸ்டமர் கேர் சப்போர்ட்

முன்னாடிலாம் கஸ்டமர் கேர் சப்போர்ட் அவ்வளவு நல்லா இருக்கும். என்ன பேசினாலும் பொறுமையா பதில் சொல்லுவாங்க. நம்ம குறையை தீர்த்து வைப்பாங்க. கஸ்டமர் ஐ தக்கவச்சுக்கிறதுல அக்கறை காட்டுவாங்க.

ஆனா இப்போ கேவலமா பண்ணறாங்க. எதோ அவங்க கிட்ட நாம ஓசில ஹெல்ப் கேட்கிற மாதிரி behave பன்னறானுங்க. கடனுக்கு பதில் சொல்லறானுங்க. நீ நெட்வொர்க் மாறினா எனக்கு என்ன னு சொல்லாம சொல்லறானுங்க. இதெல்லாம் இவங்களா பன்னறான்களா இல்ல Airtel ல இருந்து வர கட்டளையா னு தெரியல!
( போர்டபிளிட்டி apply பண்ணினா அடுத்த நாளே கால் பண்ணி கெஞ்சறானுங்க… அது ஏன்னே தெரியல )

[ இந்த கேவலமான கஸ்டமர் கேர் சப்போர்ட்க்கு காரணம் மிதம் மிஞ்சிய கஸ்டமர்கள் தான். நல்ல பேர் வாங்கியாச்சு… இனிமே எங்கே போய்டுவாங்க அப்படிங்கற திமிர் தான்.. ]

2 . கஸ்டமர் கேர் சப்போர்ட்டில் தில்லு முல்லு

ஒரு நாளுக்கு மூன்று முறைக்கு மேல் கஸ்டமர் கேர்க்கு கால் பண்ணினா அடுத்த இரண்டு வாரங்களுக்கு திரும்ப கால் பண்ணமுடியாது. உடனே பிளாக் பண்ணிடறானுங்க. சில சமயங்கள்ல கால் பண்ணும் போது கொஞ்சம் ஹார்ஷா பேசினா முதல் தடவையே பிளாக் பண்ணிடறானுங்க.

[ அட கேன பசங்களா! நாங்க எதுக்குடா மூணு தடவைக்கு மேல கால் பண்ணறோம்? ஏதாவது Issue இருக்கறதாலே தானே? கஸ்டமர் கேர் அத solve பண்ண தானே இருக்கு? ]

3 . ஒரு வினாடிக்கு ௦.2 பைசா பிச்சைஎடுக்கும் தொழில்

மற்ற நெட்வொர்க்களில் கால் சார்ஜ் வினாடிக்கு 1 பைசான்னா இவங்க 1.2 பைசா கேக்கறானுங்கோ…….. பிச்சக்கார பசங்க…..

4 . பூஸ்டர் பேக் இல் கொள்ளை

பூஸ்டர் பேக்கை பொறுத்த வரை மற்ற நெட்வொர்க்களோடு ஒப்பிட்டால் எல்லா பூஸ்டர் பேக்களும் இதில் அதிகம் தான். அடிக்கடி விலை மாற்றம் செய்யும் கேவலத்தையும் செய்கிறார்கள்.
சில சாம்பிள்கள்:
i ) Rs.97 – A2A – 10 பைசா A2O – 50 பைசா – பழைய விலை.
A2O – 60 பைசா – புதிய விலை.
ii ) Rs.197 – 3 Months validity – பழையது.
Rs.225 – 3 Months Validity – புதியது.
இப்படி எல்லா பேக் களிலும் கொள்ளை.

5 . மெசேஜ் இல் பிச்சை

Rs . 197 க்கு பூஸ்டர் பேக் activate பண்ணினா 3 Months Validity யோட Unlimited மெசேஜ் எல்லா நெட்வொர்க் க்கும் ப்ரீயா அனுப்பலாம். ஆனா இப்போ அதை Limited ஆக்கி A2A மட்டும் ப்ரீ… A2O மொபைல்க்கு 1 மெசேஜ் க்கு 10 பைசா பிச்சையா போட சொல்லறானுங்க.

6 . GPRS இல் மாற்றம்

Rs.98 க்கு recharge பண்ணினா 2GB – 1 Month Validity – பழையது.
1GB – 1 Month Validity – புதியது.
2GB வேணும்னா Rs.149 க்கு Recharge பண்ணனும் இப்போ.

7 . சர்வீஸ் மெசேஜ் மூலம் திருட்டு

இதன் மூலம் இவங்களே ஏதாவது ஒரு சர்வீஸ் activate பண்ணி விட்டுட்டு Rs.10, 15, 20, 30 ன்னு   இஷ்டத்துக்கு திருடறாங்க..

8 . உச்ச கட்ட திருட்டு ( இது சொந்த அனுபவம் )

நான் எப்போதும் Full Talk Time இல் Rs.333 க்கு கிரெடிட் கார்டு மூலம் Recharge பண்ணுவேன். இதன் மூலம் GPRS மாதத்திற்கு சில சமயங்களில் 2 முறை activate செய்ய வசதியாக இருக்கும்.

Top Up செய்து GPRS வழியாக இன்டர்நெட் Access பண்ணிக்கொண்டு இருக்கும்போதே மெசேஜ் வரும்.
‘ Thanks for download ‘this & that’ game through Airtel Live. You have been charged Rs.99 Buy Bactrim for ‘this & that’ game’
இது மாதிரி இரண்டு நிமிட இடைவெளியில் 2 மெசேஜ் வந்துவிடும். கடுப்பாகி உடனே கஸ்டமர் கேர் க்கு கால் பண்ணினால் பயங்கரமா சமாளிப்பானுங்க….

” சார்! நீங்க Airtel Live வழியா ddownload பண்ணி இருக்கீங்க”
” ஹலோ! நான் Airtel Live சர்வீஸ்யே delete பண்ணிட்டேன். மொபைல் ஆபீஸ் மட்டும் தான் Use ல இருக்கு”

கடைசியாக 72 மணி நேரத்தில் சரி செய்துவிடுவாதாக சொல்லுவார்கள்.

மீண்டும் கத்தினால் அடுத்த பத்து நிமிடங்களில் எடுத்த balance ஐ திரும்ப சேர்ப்பார்கள்.

இவ்வாறாக கடந்த 6 மாதங்களில் சுமார் 700 ரூபாய் வரை எடுத்திருக்கிறார்கள்.

நான் அனைத்தையும் திரும்ப பெற்றிருக்கிறேன். ஒரு பைசா விட்டதில்லை. இதில் கொஞ்சம் ஏமாந்தால் நம்ம காசு கோவிந்தா தான்!

போர்டபிளிட்டி apply பண்ணினேன். இதில் எனக்குள்ள பிரச்னை என்னவென்றால் என்னுடைய சிம் வேறு யாரோ ஒருவரது பெயரில் உள்ளது. அதனால் மாற்ற இயலவில்லை.

ஒரு பெரிய டவுட்!

இவங்க தான் இப்படியா? இல்ல எல்லோருமே இப்படிதானா?

யார் நல்ல Service Provider?
Booster Pack + GPRS க்கு எது better? ப்ளீஸ் சொல்லுங்க!

Add Comment