கடையநல்லூர் உள்பட பல போலீஸ் நிலையங்களில்பாஸ்போர்ட் உள்ளிட்ட விசாரணையின்போது பொதுமக்களை குற்றவாளிபோல் நடத்தி போலீசார் அலைக்கழிப்பு

கடையநல்லூர்: கடையநல்லூர் உள்பட பல போலீஸ் நிலையங்களில் பாஸ்போர்ட் விசாரணை உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக வரும் பொதுமக்களை குற்றவாளிகள் போல் போலீசார் நடத்துவதாக  புகார் எழுந்துள்ளது. பொதுமக்கள், போலீஸ் இடையே நல்லுறவு மேம்பட வேண்டும் என்ற நோக்கத்தில் பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் உள்ளிட்ட அமைப்புகள் செயல்பட்டு வருகிறது. மேலும் பொதுமக்கள், போலீஸ் இடையே விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு நல்லுறவு மேம்பாடு அடைய வழி வகை செய்யப்பட்டு வருகிறது.
ஆனால் பெரும்பாலான போலீஸ் நிலையங்களில் பொதுமக்களை குற்றவாளிகள் போல் நடத்தும் மனபாங்கு நாளுக்கு நாள் வளர்ந்து வருகிறது. பாஸ்போர்ட் விசாரணை, கோயில் திருவிழா உள்பட பல்வேறு நிகழ்ச்சிக்களுக்கு அனுமதி பெறுவதற்காக போலீஸ் நிலையம் செல்லும்  பொதுமக்களை பலமணி நேரம்  குற்றவாளிகளுடன் சேர்ந்து உட்கார வைத்து காத்திருக்க செய்து விசாரணை நடத்துவதாக புகார் எழுந்துள்ளது.
பெரும்பாலான போலீஸ் நிலையங்களில் போதிய அலுவலர்கள் இல்லாதது, வேலை பளு காரணமாக நெருக்கடிக்கு ஆளாகும் போலீஸ் அதிகாரிகள் தங் கள் ஆத்திரத்தை  பொதுமக்களிடம் பிரயோகிக்கும் சூழ்நிலை உள்ளது. ஒவ் வொரு போலீஸ் நிலையங்களிலும் வரவேற்பாளர் என்று பெயர் பலகை எழுதி வைக்கப்பட்ட ஒரு சேர், நற்காலி இருக்கும். ஆனால் ஒருநாள் கூட அதில் அலு வலர் அமர்ந்து பொதுமக் களை வரவேற்று அவர்களது குறைகளை கேட்ட தாக சரித்திரம் கிடை யாது.
பாஸ்போர்ட் விசா ரணை போன்ற நியாயமான காரணத்திற்காக வரும் பொதுமக்களை பல போலீ சார் நீ, நான் என ஒருமையில் அழைப்பதும், மோசமாக நடத்துவதும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பாஸ்போர்ட் மனு செய்வதற்கான செலவை விட போலீஸ் விசாரணைக்காக தாங்கள் அலை கழிக்கப்படுவதால் ஏற்படும் செலவு அதிகம் என பலர் குற்றம் சாட்டுகின்றனர். online pharmacy without prescription போலீஸ் தங்களை நண்பர்களாக நடத்தாவிட்டாலும் பரவாயில்லை, மனிதர்களை போல நடத்தினால் போதும் என பொதுமக்கள் கூறுகின்றனர்.
எனவே பொதுமக்கள் நலன் கருதி பாஸ்போர்ட் விசாரணை, திருவிழா போன்ற நிகழ்ச்சிகளுக்கு அனுமதி  வழங்க ஒவ்வொரு போலீஸ் நிலையங்களிலும் தனிப்பிரிவு இயங்குவதோடு பொதுமக்களை கண்ணியமாக நடத்த வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Add Comment