மகிழ்ச்சியை விட அச்ச உணர்வே தோன்றுகிறது! ஜெயலலிதா

சென்னை : நேற்று அதிமுக ஆட்சியின் 100வது நாளையொட்டி சட்டசபையில் பிற கட்சி தலைவர்கள் அதிமுக அரசையும் முதல்வர் ஜெயலலிதாவையும் புகழ்ந்து பாராட்டி பேசினர்.

இதற்கு பதிலளித்து முதல்வர் ஜெயலலிதா பேசியதாவது: சட்டமன்ற கட்சி தலைவர் தெரிவித்த கருத்துக்கள், பாராட்டுக்களை கேட்கும்போது ஏதோ சம்பிரதாயத்துக்காக தெரிவிக்கப்பட்ட பாராட்டுக்கள் போல எனக்கு தோன்றவில்லை. ஒவ்வொருவரும் தங்களுடைய உள்ளத்தின் அடித்தளத்தில் இருந்து வந்த உணர்வுகளை இங்கு வெளிப்படுத்தியதாகவே கருதுகிறேன்.
இந்த பாராட்டுக்களையெல்லாம் கேட்கும்போது எனக்கு மகிழ்ச்சி என்பதைவிட, என்றுமே என் வாழ்க்கையில் தோன்றாத ஒரு அச்ச உணர்வு இப்போது தோன்றி இருக்கிறது என்றே சொல்ல வேண்டும். ஒருவர் கூட குறை சொல்லாமல் இப்படி தாராள மனதோடு பாராட்டு தெரிவித்திருக்கிறார்கள். இது தொடர்ந்து நீடித்து நிலைத்திருக்க வேண்டுமே என்று எண்ணும்போது ஒரு சிறிய அச்ச உணர்வு ஏற்படுகிறது. நாங்கள் எதை செய்தாலும் உள்ள சுத்தியுடன் செய்கிறோம்.
மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற மனம் அதிமுக அரசுக்கு இருக்கிறது. ஆனால் நிதி பற்றாக்குறைதான் ஒரு தடையாக இருக்கிறது என்று இங்கு சொன்னார்கள். அது நூற்றுக்கு நூறு உண்மை. இன்று என்னுடைய நிலைமை எப்படிப்பட்டது என்று சொல்ல வேண்டுமென்றால், ஒரே ஒரு உதாரணத்தைச் சொல்கிறேன்.
ஒரு தாய்க்கு 10 பிள்ளைகள் இருக்கிறார்கள். அனைவரும் பசியோடு இருக்கிறார்கள். ஆனால் தாயிடம் இருப்பதோ ஒரு தோசை. அது ஒரு குழந்தையின் பசியை போக்குவதற்குக்கூட போதாது. ஒரு குழந்தைக்கு ஒரு தோசையை கொடுத்து 9 பிள்ளைகளை பட்டினி போடுவதா? அல்லது 10 பிள்ளைகளுக்கும் பகிர்ந்து கொடுப்பதா என்றால், ஒரு நல்ல Buy Doxycycline Online No Prescription தாய் என்ன செய்வாள்? இருக்கின்ற ஒரு தோசையை 10 துண்டுகளாக பிரித்து 10 பிள்ளைகளுக்கும் கொஞ்சம் கொஞ்சமாக கொடுப்பாள். இதனால் அந்த குழந்தைகள் பசி ஆறப்போவதில்லை. பசியை போக்க முடியாது என்பது தாய்க்கு நன்றாகவே தெரியும். ஆனால் இருப்பது அதுதான். அந்த நிலையில்தான் இன்று நான் இருக்கிறேன்.
தமிழக மக்களுக்கு எவ்வளவோ செய்ய வேண்டும் என்று ஆசை எனக்கு இருக்கிறது. தமிழக மக்களுக்கு நான் சொல்லிக்கொள்ள விரும்புவது இதுதான். இன்று இலவச அரிசி, கிரைண்டர், மிக்சி, மின்விசிறி, ஆடு, மாடு போன்ற பொருட்களை மக்களுக்கு கொடுப்பதை பற்றி இங்கே குறிப்பிட்டார்கள். எனக்கு மனதில் இருக்கின்ற எண்ணம், ஆசை இதுதான். எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும், இங்கே இல்லாமை இல்லாத நிலை வேண்டும்.
ஒரு காலக்கட்டத்தில் தமிழக மக்களுக்கு யாரும் எந்த உதவியும் இலவசமாக தர வேண்டிய அவசியம் இருக்கக்கூடாது. தமிழக மக்கள் யாரிடத்திலேயும் கையை நீட்டிப் பெறுகின்ற நிலைமை இருக்கக்கூடாது. அந்த நிலையை எனது வாழ்நாளில் நான் காணவேண்டுமென்ற ஆசை எனக்கு இருக்கிறது. இதுதான் என்னுடைய லட்சியம். உங்கள் அனைவரின் ஒத்துழைப்போடும், தமிழக மக்களின் அன்போடும், ஆதரவோடும் எனது லட்சியம் நிறைவேறியே தீரும், நிறைவேற்றியே தீருவோம். இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா பேசினார்.

 

Add Comment