அதிகாரிகள்போல் நடித்து பணம் பறிப்பு

நெல்லை buy Bactrim online அருகே அதிகாரிகள்போல் நடித்து லாரி ஓட்டுனரிடம் பணம் பறித்த 4 பேரைக் காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நெல்லையில் இருந்து நாகர்கோவிலுக்கு சிமெண்ட் மூடைகள் ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று நேற்று சென்றுகொண்டிருந்தது. அந்த லாரியைச் சிவகங்கையைச் சேர்ந்த முத்துராஜ் மகன் மாரியப்பன் என்பவர் ஓட்டிச்சென்றார். மூன்றடைப்பு பகுதியில் லாரியை ரோட்டு ஓரமாக மாரியப்பன் நிறுத்திவிட்டு அங்குள்ள ஓட்டலில் சாப்பிட்டார். அதன்பிறகு லாரியை எடுக்க வந்தபோது 4 பேர் அவரை வழிமறித்தனர்.

நாங்கள் வணிகவரித்துறை அதிகாரிகள் என்று சொல்லி ஆவணங்களைக் கேட்டனர். அதற்கு லாரி ஓட்டுனர் “நீங்கள் அதிகாரி அடையாள அட்டையைக் காட்டுங்கள்” என்றார். இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரம் அடைந்த 4 பேரும் மாரியப்பனை அடித்து, உதைத்து அவரிடம் இருந்த ரூ.500ஐ பறித்துக்கொண்டு ஓடினர்.

இதுகுறித்து மாரியப்பன் மூன்றடைப்பு காவல்துறையில் புகார் செய்தார். காவல்துறையினர் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினர். இதுதொடர்பாக மருதகுளத்தைச் சேர்ந்த பொன்னுத்துரை மகன் முருகன், சுடலை மகன் பரமசிவன், பொன்னுசாமி மகன் கர்ணன், நயினார் மகன் இசக்கி ஆகிய 4 பேரைக் கைது செய்தனர்.

thks

inneram

 

Add Comment