கடையநல்லூரில் இப்தார் நோன்பு திறப்பு

கடையநல்லூர் : கடையநல்லூரில் இளைஞர் காங்.,சார்பில் நடந்த இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் முன்னாள் காங்., எம்.பி., பீட்டர் அல்போன்ஸ் கலந்து கொண்டார். கடையநல்லூரில் தென்காசி லோக்சபா தொகுதி இளைஞர் காங்., சார்பில் இப்தார் நோன்பு திறப்பு மற்றும் மதநல்லிணக்க நிகழ்ச்சி கொண்டாடப்பட்டது. லோக்சபா தொகுதி இளைஞர் காங்., தலைவர் பாக்கியராஜ் தலைமை வகித்தார். நகராட்சி தலைவர் காளிராஜ், மாவட்ட காங்., துணைத் தலைவர்கள் இடைகால் மாரியப்பன், சிவராமகிருஷ்ணன், முருகேசன், மாநில காங்., செயலாளர் ஆலடி சங்கரய்யா, பொதுக்குழு உறுப்பினர் புலவர் செல்வராஜ், முன்னாள் யூனியன் தலைவர் அய்யாதுரை, மாவட்ட காங்., பொருளாளர் குலாம், அப்துல்லா யூசுப் முன்னிலை வகித்தனர். இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில அமைப்பு செயலாளர் நெல்லை மஜீத், மாவட்ட திமுக பொருளாளர் சேக்தாவூது, முஸ்லிம் லீக் மாவட்ட செயலாளர் செய்யது அகமது, நகர திமுக செயலாளர் முகமதுஅலி, இளைஞர் காங்., முன்னாள் மாநில செயலாளர் ராம்மோகன், செங்கோட்டை நகராட்சி தலைவர் ராஜசரஸ்வதி, செங்கோட்டை யூனியன் சேர்மன் சட்டநாதன் உட்பட பலர் பேசினர். இப்தார் நோன்பு நிகழ்ச்சியில் காங்., முன்னாள் எம்.பி., பீட்டர் அல்போன்ஸ் பேசுகையில், “”இறைவனுடைய திருவருளை பெறக்கூடிய புனிதமான மாதமாக ரமலான் கருதப்படுகிறது. அழகான மாதமாக அனைவராலும் பேசப்படுகிறது. ஏழைகளுக்கு உதவக்கூடிய மாதமாகவும் நேசிக்கப்படுகிறது. ரமலான் மாதத்தில் தர்மம் செய்யக்கூடியது மிகப்பெரிய நன்மை தரக்கூடியதாக கருதப்பட்டு வருகிறது. இந்த இப்தார் நிகழ்ச்சி மதநல்லிணக்க நிகழ்ச்சியாக கொண்டாடப்பட்டு வருவது மிகவும் பாராட்டக்குரியதாகும்” என்றார். நிகழ்ச்சியில் சங்கரன்கோவில் இளைஞர் காங்., பொது செயலாளர் உமாசங்கர், ஆய்க்குடி மணி, செங்கோட்டை வட்டார காங்., தலைவர் கிளாங்காடு மணி, சிந்தாமணி, முன்னாள் கவுன்சிலர் சமுத்திரம், சாமிநாதன், முன்னாள் நகர காங்., தலைவர் பெரியசாமி, கவுன்சிலர் பாதுஷா, பஞ்., தலைவர் no prescription online pharmacy மாணிக்கம் உட்பட பலர் கொண்டனர்.

 

Add Comment