நீதிமன்றம் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு அழைப்பாணை அனுப்ப வேண்டும்: ராசா!

2G வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களின் வாதத்தை சிறப்பு நீதிமன்ற நீதிபதி சைனி கேட்டு வருகிறார். இன்று இது குறித்த வாதத்தில் அரசுக்கு இழப்பு ஏற்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் தொலை தொடர்புத் துறை அமைச்சர் ராசா இந்த வழக்கின் சாட்சியாக Lasix online ஆஜராக இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு நீதிமன்றம் அழைப்பாணை அனுப்ப வேண்டும் என்று வாதாடினார்.
பிரதமர் மன்மோகன் சிங், நிதித் துறை அமைச்சர் ப.சிதம்பரம் மற்றும் தகவல் தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் கபில் சிபல் ஆகியோரை 2G அலைக் கற்றை ஏலத்தில் இழப்பு ஏற்பட வில்லை என்பதை நிரூபிக்க சாட்சியாக அழைக்க அழைப்பாணை அனுப்ப வேண்டும் என ராசா வாதாடினார். ராசா சார்பாக வழக்கறிஞர் யாரும் இல்லாமல் ராசாவே தமது வாதங்களை எடுத்து வைத்தார்.

நேற்று கனிமொழி சார்பில் ஆஜராகி வாதாடிய வழக்கறிஞர் சுஷில் குமாரும் பிரதமரை இந்த வழக்கில் சாட்சியாக விசாரிக்க வேண்டும் என்ற வாதத்தை எடுத்து வைத்தார் என்பது குறிப்பிடத் தக்கது.

Add Comment