ஓரியன்டல் அரபிக் பள்ளிக்கூடங்களின் தனித்தன்மை பாதுக்காக்கப்பட வேண்டும்– சட்டபேரவையில் பேரா.ஜவாஹிருல்லா பேச்சு

மாண்புமிகு பேரவைத் தலைவர்: மாண்புமிகு உறுப்பினர் முனைவர்.எம்.எச்.ஜவாஹிருல்லா

முனைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, மிகச் சிறந்த தொலைநோக்குப் பார்வையுடன் இந்த நல்லாட்சியிலே 2011-12 ஆம் ஆண்டுக்கான பள்ளிக்கல்வி மற்றும் உயர் கல்வித் துறைகளுக்கான மானியக் கோரிக்கைகள்.

இந்த பேரவையிலே முன்வைக்கபட்டிருக்கின்றது. அதற்காக, நேரத்தின் அருமையைக் கருதி ஒட்டுமொத்தமாக இந்த சிறந்த மானியக் கோரிக்கைகளைக் முன்வைத்ததற்காக, மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கு மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

இந்த அவையிலே ஒரு சுவையான, சூடான விவாதம் நடைபெற்றுது, சமச்சீர் கல்வியைப் பற்றி, தொடக்கத்திலேயிருந்தே மனிதநேய மக்கள் கட்சி சமச்சீர் கல்வி, திமுக அரசு கொண்டுவந்த சமச்சீர் கல்வி அவசர கோலத்திலே நம்முடைய முதலமைச்சர் அவர்களுடைய வார்த்தையிலே சொல்லவேண்டுமென்றால், உண்மையிலேயே அரை வேக்காட்டுத்தனமாக கொண்டுவரப்பட்ட கல்வித் திட்டம் என்பதிலே எந்த சந்தேகமும் இல்லை.

இன்று இந்த ஆண்டு உச்சநீதிமன்ற உத்திரவின் காரணமாக தமிழக அரசு கட்டாயமாக அமல்படுத்தக்கூடிய நிலைக்குத் தள்ளப்பட்டிருக்ககூடிய இந்தச் சமச்சீர் கல்வித் திட்டத்தினாலே, சிறுபான்மை சமூக மாணவர்கள் பெரிய அளவிலே பாதிக்கப்பட்டிருக்கின்றார்கள். ஏனென்றால், பத்தாம் வகுப்பு தேர்விலே அவர்கள் கட்டாயமாக தமிழிலே தேர்வு எழுத வேண்டும். தமிழ் தேர்வு எழுத வேண்டும். ஆனால் இதுவரை ஆறாம் வகுப்பிலிருந்து தொடர்ந்து அவர்கள் ஒன்று உருது அல்லது மலையாளம் அல்லது தெலுங்கு அல்லது அரபி போன்ற மொழிகளை படித்துக்கொண்டுவரக்கூடிய அவர்கள் பத்தாம் வகுப்பில் கட்டாயமாக தமிழ் தேர்வு எழுதும்போது எப்படி வெற்றி பெற முடியும். மாணவர்களுடைய எதிர்காலத்தைக் கருத்தில் கொள்ளாமல் இந்தத் திட்டம் கொண்டுவரப்பட்டிருக்கின்றது. இதை சீரமைப்போம் என்று தமிழக அரசு குறிப்பிட்டிருக்கின்றது. சிறுபான்மை மக்களுடைய மொழிகள், தாய்மொழியாக தமிழ், தாய்மொழியாக உருது, அரபி அல்லது மலையாளம் படிக்கக்கூடிய மாணவர்களுடைய நலன்களை, மற்ற சிறுபான்மை மொழி மாணவர்களுடைய நலனைக் கருத்தில் கொண்டு, இந்தத் திட்டத்தை சீரமைக்கவேண்டும்.

அதேபோல, தமிழ்நாட்டிலே முஸ்லிம்களால் ஒரியன்டல் அரபிக் பள்ளிக்கூடங்கள் நடத்தப்பட்டுவருகின்றன. அதேபோல ஓரியன்டல் சான்ஸ்கிரிட் பள்ளிக்கூடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த காலச்சார பள்ளிக்கூடங்களுடைய தனித்தன்மையை பாதுகாப்பதற்கும் இந்த அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன். சிறுபான்மையினர் மக்களை ஏமாற்றியதன் காரணமாகத்தான் தேர்தலிலே திமுகவுக்கு மரண அடியை சிறுபான்மையினர் மக்களும் சேர்த்து கொடுத்தார்கள். அடுத்தாக உயர் கல்விப் பற்றி இங்கு ஒரு முக்கியமான விஷயத்தை பற்றி மட்டும் இங்கே நான் எடுத்துரைக்க விரும்புகிறேன். இந்தியாவிலே மிக அதிகமாக Deemed Universities அல்ல அவை Doomed Universities நிகர்நிலைப் பல்கலைக்கழகம் என்று தமிழிலே சொல்கிறார்கள். நான் அதை தமிழில் நிகரில்லாத அதிகாரம் படைத்த பல்கலைக்கழகங்களாக இந்த Deemed Universities இருக்கின்றன. இதற்கு அரசாங்கத்தினுடைய எந்தவித கட்டுப்பாடும் கிடையாது. எவ்வளவு மாணவர்களை வேண்டுமானாலும் சேர்த்துக்கொள்ளலாம். எவ்வளவு அதிகமான கட்டணம் வேண்டுமானாலும் வசூலிக்கலாம், அவர்கள் Regulate பண்ணுவதற்கு அவர்களை நிர்வாகம் செய்வதற்கு மாநில அரசுக்கு அதிகாரமே இல்லை.

அதேபோல நாம் மிகவும் கஷ்டப்பட்டு, தமிழக அரசு, நம்முடைய மாண்புமிகு முதல்வர் 69 சகவீதம் இட ஒதுக்கீட்டினை உறுதிபடுத்துவதற்கான தொடர் நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள். ஆனால், தமிழ்நாட்டில்  இருக்கக்கூடிய இந்த Deemed Universities யிலே இட ஒதுக்கீடு மாணவர்களுக்கு இல்லையென்ற ஒரு நிலை இருக்கிறது. என்னுடைய கோரிக்கை என்னவென்றால், சமூக நீதியில் அக்கறை உள்ள தமிழக அரசு உச்ச நீதிமன்றத்திலே நிலுவையில் இருக்கக்கூடிய Deemed Universities தொடர்பான வழக்கிலே தன்னையும் இணைத்துக்கொண்டு, இந்த Deemed Universities நம்முடைய தமிழக அரசாங்கத்தினுடைய buy Amoxil online வரைமுறைக்குட்பட்டு வரவேண்டும்.

அதுவும் குறிப்பாக, கல்வி பொதுப் பட்டியலிலிருந்து மாநிலப் பட்டியலுக்கு மாற்றப்பட வேண்டும். இதற்கான நடவடிக்கை எடுக்கவேண்டுமென்று சொல்லி, மற்றவற்றையெல்லாம் எழுதிக் கொடுத்துவிடுகிறேன் என்று சொல்லி வாய்ப்பளித்தமைக்கு நன்றி தெரிவித்து விடைபெறுகிறேன்.

Add Comment